கலைஞரின் ஒவ்வொரு திறமைக்கும் தனித்தனி இடம் கொடுத்துள்ள விக்கிப்பீடியா

2 Min Read

பொதுவாக தனி நபரின் திறமைகளை பதிவிடும் போது ஒரே பதிவாக விக்கிப்பீடியா ஏற்றுக்கொள்ளும் – ஒரே நபரின் பெயரில் பல பதிவுகளை/பக்கங்களை ஏற்காது. இதற்கு காரணம் தகவலை இணையவழியில் தேடுவோருக்கு குழப்பம் மற்றும் ஜங்க் எனப்படும் தேவையில்லாத தகவல்களையும் கொடுக்கும் என்ற காரணத்தால் தான்

ஆனால், முத்தமிழறிஞர் கலைஞருக்கு விக்கிபீடியா இந்த விதிமுறையில் இருந்து விலக்களித்து அவரது புகழுக்கு மேலும் மகுடம் சூட்டியுள்ளது. அதாவது அவரது ஒவ்வொரு தனித்தனி படைப்பிற்கும் தனித்தனி தகவல் பக்கங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.
அதில் கலைஞரின் திரைப்படம் தொடர்பான பதிவுகள் அடங்கிய விக்கிபீடியா https://ta.wikipedia.org/wiki/ மு.-கருணாநிதி – திரை- வரலாறு என்ற இணையதளச்சுட்டியில் உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சராக இருந்தவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மறைந்த தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி தமிழ்த் திரைப்படவுலகிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தவராவார்.
கலைஞர் தனது 17 வயதில் தமிழ்த் திரைப்படங்களுக்கு கதை, வசனம் எழுத ஆரம்பித்தார்.

கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

ஞாயிறு மலர்

ராஜகுமாரி (திரைப்படம்), அபிமன்யு (திரைப்படம்), மந்திரி குமாரி, மருதநாட்டு இளவரசி, தேவகி, மணமகள், பராசக்தி, பணம், திரும்பிப்பார், நாம், மனோகரா.அம்மையப்பன், மலைக்கள்ளன், ராஜா ராணி, புதுமைப்பித்தன், புதையல்.
குறவஞ்சி, எல்லாரும் இந்நாட்டு மன்னர், அரசிளங்குமரி, தாயில்லா பிள்ளை.
இருவர் உள்ளம், காஞ்சித்தலைவன், பூம்புகார், பூமாலை, அவன்பித்தனா?.

மணிமகுடம், மறக்க முடியுமா?, தங்கத் தம்பி, வாலிப விருந்து, பிள்ளையோ பிள்ளை.
கண்ணம்மா, பூக்காரி, அணையா விளக்கு, வண்டிக்காரன் மகன், நெஞ்சுக்கு நீதி.
ஆடு பாம்பே, காலம் பதில் சொல்லும், குலக்கொழுந்து, மாடி வீட்டு ஏழை.
தூக்குமேடை, இது எங்கநாடு, திருட்டு ராஜாக்கள், காவல் கைதிகள், குற்றவாளிகள்.
காகித ஓடம், பாலைவன ரோஜாக்கள், நீதிக்குத் தண்டனை, ஒரே ரத்தம், வீரன் வேலுத்தம்பி.
சட்டம் ஒரு விளையாட்டு, புயல் பாடும் பாட்டு, மக்கள் ஆணையிட்டால், பாசப் பறவைகள், பாடாத தேனீக்கள்.
தென்றல் சுடும், நியாய தாராசு, பொறுத்தது போதும், பாசமழை, காவலுக்குக் கெட்டிக்காரன், மதுரை மீனாட்சி, புதிய பரவசம், பெண் சிங்கம், உளியின் ஒசை, இளைஞன்.
பாசக் கிளிகள், மண்ணின் மைந்தன், புதிய பராசக்தி, நீதிக்கு தண்டனை
பாலை வனப்பூக்கள், பொன்னர் சங்கர்.

திரைக்கதை / வசனம் எழுதிய திரைப்படங்கள்

(பணம், எல்லாரும் இந்நாட்டு மன்ன)

வசனம் எழுதிய திரைப்படங்கள்

ராஜகுமாரி, மலைக்கள்ளன், ரங்கோன் ராதா, அரசிளங்குமரி.

திரைப்படங்களுக்கு எழுதிய பாடல்கள்

திரைப்படங்களுக்கு எழுதியுள்ள சில பாடல்கள்: ஊருக்கு உழைப்பவன்டி – மந்திரிகுமாரி, இல்வாழ்வினிலே ஒளி – பராசக்தி, பூமாலை நீயே – பராசக்தி, பேசும் யாழே பெண்மானே – நாம், மணிப்புறா புது மணிப்புறா – ராஜா ராணி.

பூனை கண்ணை மூடி – ராஜா ராணி, ஆயர்பாடி கண்ணா நீ – ரங்கோன் ராதா, பொதுநலம் என்றும் – ரங்கோன் ராதா.
அலையிருக்குது கடலிலே – குறவஞ்சி, வெல்க நாடு வெல்க நாடு – காஞ்சித்தலைவன், ஒருவனுக்கு ஒருத்தி என்ற – பூம்புகார், கன்னம் கன்னம் – பூமாலை, காகித ஓடம் – மறக்கமுடியுமா, ஒண்ணு கொடுத்தா – மறக்கமுடியுமா?, நெஞ்சுக்கு நீதி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *