கலி.பூங்குன்றனுக்கு வழங்கியது தகுதியானதே
முறைப்படி விதிப்படியே நடந்திருக்கிறது
எதிர் மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சென்னை, டிச. 15 திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட “தந்தை பெரியார் விருது-க்கு” எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதி மன்றம்.
2022-ஆம் ஆண்டுக்கான சமூக நீதிக்கான ‘தந்தை பெரியார் விருது’ திராவிடர் கழகத்தின் துணைத்தலைவர் கலி. பூங்குன்றனுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது.
இவ்வாறு வழங்கப்பட்ட விருதை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த டி.சிறீதர் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்தார்.
மனுதாரர் தனது மனுவில் விருதுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும், சான்றிதழ் மற்றும் தங்கப் பதக்கமும் தரப்பட்டது. மனுதாரர் தரப்பில் தானும் பல ஆண்டுகளாக மிகவும் நெருக் கடியான சூழ்நிலையிலும் சமூக சேவை செய்து வருவதால் விருதுக்கு விண்ணப்பித்ததாகவும், மேலும் 24 பேர் கடந்த ஆண்டு விண்ணப்பித்ததாகவும் வாதிட்டார்.
ஆனால், விண்ணப்பம் செய்யாத ஒரு அமைப்பின் துணைத்தலைவர் என்ற தகுதியை மட்டுமே வைத்து கலி. பூங்குன்றன் என்பவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் கூறியதுடன், இப்பிரச்சினையை மறுபரி சீலனை செய்து 24 விண்ணப்பதாரர்களில் ஒருவருக்கு வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரினார்.
ஆனால் கலி.பூங்குன்றன் அவர்கள் முறைப்படி விருதிற்கு தேர்தெடுக்கப் பட்டு விதிமுறைப்படி தான் நடந்திருக் கிறது என்பதே உண்மையாகும். மேலும் தகுதி உள்ள ஒருவருக்கே தந்தை பெரியார் விருது வழங்கப்பட் டுள்ளது என்பதே சரியாகும்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழ்நாடு அரசு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி தகுதி யானவருக்கு விருது வழங்கும் உரிமை உண்டு என்றும் விருது கொடுப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் எந்த முகாந்தரமும் இல்லை என்றும் கூறி ரிட் மனுவை தள்ளுபடி செய்தது.