தமிழ்நாடு மேனாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு – மாவட்ட குழந்தைகள் நலக்குழு – Ladies circle India Trichy Round – அனைத்து அமைப்புகளும் திருச்சி மாவட்ட அனைத்து குழந்தைகள் இல்லத்திற்கு ஓவியப் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, தானிய வரைப்பட போட்டி, கழிவுப் பொருட்களை வைத்து அழகுப் பொருட்கள் செய்தல் போன்ற போட்டிகளை அந்தந்த இல்லங்களில் நடத்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற அனைத்து மாணவ, மாணவிகளும் கடந்த 6.12.2023 அன்று திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். மேற்கண்ட அமைப்புகளைச் சார்ந்த அதிகாரிகளும், அந்தந்த இல்லங்களின் பணியாளர்களும் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி போட்டியை சிறப்பாக நடத்த அனைத்து உதவிகளும் ஏற்பாடு செய்து கொடுத்த நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தின் நிர்வாகிக்கும், பணியாளர்களுக்கும் குழந்தைகள் நலக்குழு தலைவர் நன்றியை தெரிவித்தார்.