சென்னை, அக். 24 – நீட் விவகாரத்தில் மேலும் அழுத்தம் தருவதற்காகவே நீட் விலக்கு கையெ ழுத்து இயக்கம். ஒன்றி யத்தில் ஆட்சி மாற்றம் ஏற் பட்ட பிறகு நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைக்கும்என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேட்டி யில் குறிப்பிட்டார்.
நீட் தேர்வு எதிர்ப்பு கையெ ழுத்து இயக்கம் தமிழ்நாடு முழுவ தும் நடத்துவது தொடர்பாக காணொலி வழியாக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. திமுக அமைப்பு செயலாளார் ஆர். எஸ்.பாரதி தலைமையில் நடை பெற்ற ஆலோசனைக்கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்பட தி.மு.க. அனைத்து அணி செயலாளர்கள் பங்கேற்றனர்.
இதன் பின்னர் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்பாரதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார். இதில் நீட் தேர்வு எதிர்ப்பு எதற்கு என்பது குறித்து விவாதிக்கப் பட்டதாக கூறினார். பா.ஜ.க. ஆட்சி வருவதற்கு முன் பாக ரூ.15 லட்சம் வங்கியில் செலுத் தப்படும் என்றும் 2 கோடி பேருக்கு வேலை தரப்படும் என கூறியதை செய்தார்களா? என கேள்வி எழுப்பினார்.
கடந்த ஆட்சியில் நீதிமன்றத்தில் சரியாக வாதாடாத காரணத்தி னால் தான் நீட் விவகாரத்தில் வெற்றி பெற முடியவில்லை என்று கூறிய அவர், ஜெயலலிதா, கலை ஞர் ஆகியோர் இருந்தபோது தமிழ் நாட்டில் வராத நீட், அ.தி.மு.க.வால் தான் வந்ததாக குற்றம்சாட்டினார். நீட் விவகாரத்தில் மேலும் அழுத் தம் தருவதற்காகவே நீட் விலக்கு கையெழுத்து இயக்கம் என்றும் ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் ஏற் பட்ட பிறகு நீட் விலக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
போக்குவரத்து மற்றும் பொது மக்களுக்கு இடையூறாக கொடிக் கம்பம் வைக்கக் கூடாது என விதி இருந்தும் சண்டை இழுக்கவே பா.ஜ.க. விதிமுறை மீறி கொடிக் கம்பத்தில் பிரச்சினை செய்வதாக வும், முதலமைச்சர் மேயராக இருந்த போதே கொடிக் கம்பங் களை அகற்றியுள்ளதாக கூறினார். திமுக கொடிக் கம்பம் விதிமுறை மீறி எங்கு இருக்கிறது என கூறி னால் அகற்ற தயாராக இருப்பதா கவும் அவர் தெரிவித்தார்.