சென்னை, அக். 26 – ஆரியம், திராவிடம் என ஆளுநர் பேசியதை கேட்டபோது புராணம் படிக்க வில்லை என்று கூறிய பழனிசாமி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து குறைகூறுவதா? என்று தி.மு.க.வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (25.10.2023) வெளியிட்ட அறிக்கை:
மூன்றாண்டுகள் முதலமைச்சர் பதவியில் இருந்து மக்களைப் பற்றி கவலைப்படாமல், தன்னையும், தன்னை சார்ந்தவர்களையும் வள மாக்கிக் கொண்ட பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிஏஏ சட்டம் என மாநில அரசுகளின் அதிகாரத்தை பறித்தும், சிறுபான்மை இன மக் களை அங்கீகரிக்க மறுத்தும் சட் டங்களை நிறைவேற்றியபோது, பாஜக அரசை ஆதரித்தார். அவர் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டா லினை குறைகூறுகிறார்.
தி.மு.க. ஆட்சிக்காலங்களில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் முன்னேற் றத்துக்காகவும், நிறைவேற்றிய திட்டங்களை மறைத்துவிட்டு, தான் செய்ததாக கூறிவரும் பழனி சாமியை, மக்கள் ஏற்கெனவே ஆட்சியில் இருந்துதூக்கி எறிந்து விட்டனர். இதைப் புரிந்து கொள் ளாமல் அறிக்கை விட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாடு அரசின் நிதி மேலாண்மையை சரியாகப் கையாளாமல் ரூ.5.7 லட்சம் கோடி கடனில் விட்டுச் சென்ற பழனிசாமி அரசின் குறைகளை, சரி செய்வதையே சவா லாக ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் அரசு செய்து வருகிறது.
தி.மு.க.வின் 2021 தேர்தல் அறிக் கையில் உறுதியளித்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நிறை வேற்றி வருகிறார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த பழனிசாமியிடம், ‘தமிழ் நாட்டில் விடுதலைப் போரில் ஈடுபட்ட வர்களைப் பற்றி யாரும் கவலைப் படாமல், ஜாதி அரசியல் நடத்துகிறார்கள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது குறித்து கேட்டனர்.
அதற்கு பழனிசாமி ‘‘நான் புராணங்களைப் படித்ததில்லை. அறிஞர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகளை என்னிடம் கேட்கா தீர்கள்’’ என்று தன்னைப்பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.
அவர், ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட விடு தலைப் போரை, மகாபாரதப் போர் என்று நினைத்துக் கொண்டு பேசியிருக்கிறார். அந்த போர் புராணக் கதைகளில் உள்ளது என்றும் கூறியிருக்கிறார்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.