புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் அரசு அதிகாரிகளுக்கு தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்

viduthalai
4 Min Read

சென்னை, நவ. 9 – தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

அன்பார்ந்த கண்காணிப்பு அதிகாரிகள், மூத்த அதிகாரி கள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி அதிகாரிகள், காவல் துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், தமிழ்நாடு மின் உற் பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் ஏனைய துறைகளின் அதிகாரிகள் மற்றும் அலுவலர் களே, இந்த இடர்மிகு காலகட் டத்தில் நீங்களும் உங்களுடைய குழுவினரும் மேற்கொண்டு வரும் சிறப்பான பணியை நான் பாராட்டுகிறேன். பின்வரும் கருத்துகளை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்:

பாதிக்கப்பட்ட பகுதிகளி லும், நகரின் ஏனைய பகுதிகளி லும் சாலைகள்/தெருக்கள் மற் றும் திறந்தவெளிகளை போர்க் கால அடிப்படையில் தூய் மைப்படுத்த வேண்டும். தூய் மைப்படுத்திய பின்னர், பிளீச் சிங் பவுடரை தூவ வேண்டும். பூச்சிக்கொல்லி தெளித்தல், நோய் கட்டுப்பாட்டு நடவடிக் கைகள் ஆகியவற்றை மேற் கொள்ள வேண்டும்.

இதுவரை வெள்ளம் வடி யாமலுள்ள ஒவ்வொரு தெரு வையும் பட்டியலிட்டு, நீரை வெளியேற்றுவதற்கான திட்டத்தை வகுக்கவும். இன்று மாலைக்குள் அனைத்து தெருக் களிலும் நீரையகற்றி இயல்பு நிலையை மீட்டெடுக்க வேண் டும். பெருநகர சென்னை மாநக ராட்சி மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துடன் ஒருங்கிணைந்து மின்சாரம் தடைபட்ட இடங் கள் / தெருக்களைக் கண்ட றிந்து, மீதமுள்ள பகுதிகளில் மின்சாரம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இலை தழைகள் மற்றும் முறிந்து விழுந்த மரங்கள் அகற் றப்பட வேண்டும். மேலும், குடி நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர கற்று மேலாண்மை தொடர் பாக, சென்னை பெருநகர குடி நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர கற்று வாரியத்தின் செயல்பாடு களை கண்காணித்து ஒருங்கி ணைத்தல், குடிநீர் விநியோக நிலையங்கள் மற்றும் கழிவு நீரகற்று நிலையங்களை கணக் கெடுத்து, அவற்றின் செயல் பாடுகளை ஆய்வு செய்யவும். சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்துடன் இணைந்து செயல்படுவதுடன், கூடுதல் பணியாக கழிவுநீர் குழாய்களில் உள்ள அடைப்பை நீக்கும் ஜெட் ரோடிங் இயந்தி ரங்கள், அதிக திறன் கொண்ட உறிஞ்சி இயந்திரங்கள் மற்றும் கழிவுநீரகற்றும் கொள்கலன் ஊர்திகளை (sewerage Tankers) ஏனைய இடங்களிலிருந்து வரவழைத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரியவாறு பயன் படுத்த வேண்டும்.

ஏனைய மாவட்டங்களிலி ருந்து பெறப்படும் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முறையாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் விநியோகிக் கப்பட வேண்டும். பால் விநி யோகம் மற்றும் பிற இன்றிய மையாப் பொருட்களின் இருப்பினைக் கணக்கிடுங்கள். யாதொரு வணிகரும் நிர்ணயிக் கப்பட்ட உயரளவு விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் கூடுதல் விலையில் பொருட் களை விற்பனை செய்வதில்லை என்பதை உறுதி செய்யவும். நிர்ணையிக்கப்பட்ட உயரளவு விற்பனை விலையைக் (MRP) காட்டிலும் அதிக விலை வைத்து பொருட்களை விற் பனை செய்யும் வணிகர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும்.

பொதுமக்களின் நலன் கருதி, தோட்டக்கலை மற்றும் கூட்டுறவு துறை 150 நடமாடும் காய்கறி கடைகளை திறந்துள் ளது. காய்கறிகளுடன் சேர்த்து பாலையும் அவர்கள் விற்பனை செய்வார்கள். தேவையுள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் இவை கிடைப்பதற்கான வழி களை உறுதி செய்யவும். பாதிக் கப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வரு கின்றன. மருத்துவ முகாம்க ளின் செயல்பாட்டினை கண் காணிக்கவும்,

பள்ளிகள் மற்றும் கல்லூ ரிகள் வரும் திங்கட்கிழமை முதல் வழக்கம் போல் திறக் கப்படும். எனவே, பள்ளி மற் றும் கல்லூரி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். பள்ளி வளாகத்தில் முறிந்து விழுந்த மரங்களும், மரக்கிளை களும் அகற்றப்பட வேண்டும். அனைத்து பொதுக் கழிப்பறைகளும், சமுதாய கழிப்பறைகளும் சுகாதாரமான நிலையில் இருப் பதை உறுதிசெய்ய வேண்டும்.

தெருவிளக்குகள் சரியாக வேலை செய்வதை உறுதி செய்ய வேண்டும். பாதிக்கப் பட்ட மக்களின் இன்னல்களை / துயரங்களை தணிப்பதற்கு நாம் பணியாற்றி வருகிறோம். எனவே, தயவுகூர்ந்து அதிகாரி களையும் பணியாளர்களையும் ஊக்கப்படுத்துங்கள், அவர்களை பொதுமக்களிடம் கனிவுடனும், பொறுமையுட னும் நடந்து கொள்ளுமாறும், வாக்குவாதத்தை மோதலை தவிர்க்குமாறும் அறிவுறுத்துங் கள். நமது அலுவலர்களும் பணியாளர்களும் வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட நிலையி லும், அவர்கள் இரவு பகலாக தங்களது கடமைகளை நிறை வேற்றி வருவதை நாம் மனதார பாராட்டுகிறோம்.

அரசின் செயல்பாடுகளும் மீட்பு முயற்சிகளும் அனைவ ரும் அறியும் வகையில் இருக்க வேண்டும். எனவே மீட்பு, நிவா ரணம் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட வேண்டும். நாம் இயல்பு நிலையை நெருங்கிவிட் டோம். முழு இயல்பு நிலையை அடைந்து விடுவோம்.

இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *