ராமராஜ்ஜியம் குறித்து மேடை தோறும் பேசும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் ஆதித்யநாத் மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்சின் சேவை நிறுவனம் ஒன்று உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடத்திய கூட்டம் ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பில்கேட்சு-க்கு சாரனாத் தம்மச்சக்ர முத்திரையில் இருந்த புத்தர் சிலையை பரிசளித்தார்.
ராமராஜ்யம் குறித்து மேடைக்கு மேடை பேசும் இவர்கள் இது வரை எந்த ஒரு வெளிநாட்டு விருந்தினர்களுக்கும் ராமர் சிலையையோ அல்லது ராமர் கோவில் மாதிரியையோ பரிசாக அளித்ததில்லை.
நடந்து முடிந்த ஜி – 20 மாநாட்டு விருந்தினர்களுக்கு பிரதமர் மோடி அசோகச் சக்கர முத்திரை பதித்த புத்தரின் கைகள் காட்டும் அபயமுத்திரையுடன் கூடிய பட்டயங்களைத்தான் நினைவுப் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமன் சிலையை ஏன் கொடுப்பதில்லை?
Leave a Comment