3 ஆயிரம் ஆண்டுக்கு முன்பே இரும்பு உருக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டுபிடிப்பு

1 Min Read

மதுரை, அக். 27- மதுரை உசிலம்பட்டி அருகே புத்தூர் மலைப்பகுதியில் பழைமை யான பாறை ஓவியங்களை தொல்பொருள் ஆய்வாளர் காந்தி ராஜன் குழுவினர் கண்டறிந்தனர். 

புத்தூர் மலை உசிலம்பட்டி-திரு மங்கலம் சாலையில் உள்ள ஏ.ராமநாதபுரத்திலிருந்து மலைப்பட்டி சாலையில் அமைந்துள்ளது. புத்தூர் மலைக்கு மேற்கே உள்ள பகுதி யில் சமணர்கள் வாழ்விடங்களும் புடைப்புச் சிற்பங்களும் குகையில் காணப்படுகின்றன. அதே குகையில் பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன.  3 ஆயிரம் ஆண்டு களுக்கு  முற்பட்ட தாழிப் பானைகள், கருப்பு-சிவப்பு பானை ஓவியங்கள், இரும்பு உருக்கப்பட்டதற்கான தட யங்கள் ஆகியவையும் கண்டறியப்பட்டுள்ளன. இது குறித்து கலை வரலாற்றியல் ஆய்வாளர் க.த.காந்தி ராஜன் கூறியதாவது:-  இங்குள்ள பாறையில் வெள்ளைநிற கோட்டோவியங் கள்  உள்ளன. இவை 3,000 ஆண்டுக ளுக்கு மேல் பழை மையானதாக இருக்கலாம். வேட்டைச் சமூகம், வேளாண் சமூகம் என வெவ்வேறு காலகட்ட ஓவியங்கள் காணப் படுகின்றன. வில்லேந்திய மனிதன்,

குதிரை வீரன், குதிரை வீரனுடன் போர்புரியும் வீரன் என 35 ஓவியங்கள் உள்ளன.  இவற்றில் ஆண், பெண் தொடர்பான ஓவியமும் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும்பாறை, திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் தான் இது போன்ற ஆண்-பெண் தொடர்பான ஓவியம் காணப்படுகிறது. காட்டுப்பகுதியில் மழை பெய் தால் தங்குவதற்கு ஏற்ற குகைகளும் அந்த காலகட்டத்தில் இருந்துள்ளது. வேட்டைச் சமூகம் இருந் ததை உறுதிப் படுத்தும் வகையில் இப்பகுதியில் இன்றைக் கும் வாழும் பளியர் இனத்தைச் சேர்ந்த வேட்டைச் சமூகம் உள்ளது என்றார். 

மேலும் அவர் கூறுகையில், உசிலம்பட்டி அருகிலுள்ள கொங்கபட்டியில் 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்கள் உள்ளன. இதில் தத்தன், அமரதத்தன் போன்ற எழுத்துகள் படிக்கக்கூடிய அளவில் இருக்கின்றன. மற்ற எழுத்துக்கள் சிதிலமடைந்துள்ளன. இப்பகுதியில் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டால் மேலும் தகவல் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *