கடவுளுக்கா, மின்சாரத்திற்கா? யாருக்கு சக்தி அதிகம்?

1 Min Read

திருச்செந்தூர் கோயிலில் மின்சாரம்தாக்கி பக்தர் சாவு

தூத்துக்குடி, டிச. 2- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகே மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்தார். கோயில் அருகே புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்திருந்த போது மின்கசிவு ஏற்பட்டதில் பக்தர் பிரசாத் உயி ரிழந்த நிகழ்வு குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக் குடி மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். 

மதுரை மாவட்டம் திருப்பரங் குன்றத்தை சேர்ந்த ஜோதிபாசு தனது உறவினர்களுடன் சேர்ந்து திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலுக்கு சாமி கும்பிட நேற்று (1.12.2023) சென்றிருந்தார். கடலில் நீராடி விட்டு ஜோதிபாசு தனது மகன் பிரசாத் உடன் கோவிலுக்கு எதிரில் இருந்த புறகாவல் நிலையம் அருகே அமர்ந்திருந்தார்.

புறகாவல் நிலையத்தின் பின் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த எர்த் வயரில் மின் கசிவு ஏற்பட்டு அது அங்கு அமர்ந்திருந்த பிரசாத் மீது தாக்கியது. இதில் அலறி துடித்தார் பிரசாத். மகனை காப் பாற்ற சென்ற ஜோதிபாசு மீதும் மின்சாரம் பாய்ந்தது. 

இதனையடுத்து அங்கிருந்த பக் தர்கள் மின்சாரத்தை துண்டித்து பிரசாத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரி சோதித்த மருத்துவர்கள் பிரசாத் ஏற்கெனவே உயிரிழந்து விட்ட தாக கூறினர். 

இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோவில் நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே தனது மகன் உயிரிழந்து விட்டதாக ஜோதிபாசு குற்றம் சாட்டியுள்ளார்.

லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு பாது காப்பு வசதி செய்து தரப்படவில்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டி யுள்ளனர். 

இதனிடையே திருச்செந்தூர் கோவிலுக்கு வந்த பக்தர் பிரசாத் உயிரிழந்தது குறித்து மின்சார வரிய அதிகாரிகளிடம் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய கோட் டாட்சியருக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *