இவரைத் தெரிந்து கொள்வீர்!

1 Min Read

41 பேர் மீட்டதன் பின்னணியின் இருந்த

 ஆஸ்திரேலியர் அர்னால்டு டிக்ஸ்

உலகம்

இந்திய மனங்களை வென்ற அர்னால்டு டிக்ஸ். பன் னாட்டுச் சுரங்க தொழிலாளர் அமைப்பின் தலைவரான இவர் உலகின் எங்குச் சுரங்க தொழிலாளர்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் வந்து  நிற்பவர். உத்தரகாண்ட் மாநிலத்தில் சில்க்யாராவில் சுரங்கம் இடிந்த செய்தி கேட்டு உடன் இந்தியா வந்தார்.

2010 ஆம் ஆண்டு சிலி சுரங்க விபத்து, 2013 ஆம் ஆண்டு சீன சுரங்க விபத்து போன்ற மிகப்பெரிய விபத்துக்களின் போது அங்கு சென்று மீட்புப் பணியில் தானே முன்னின்று செய்து ஆலோசனைகளைக் கொடுத்து  மீட்டதில் இவரது பங்கு அதிகம் அந்த அனுபவத்தில் சுரங்க விபத்து பற்றி அறிந்து நார்வேயில் இருந்த அவர் உடனடியாக டில்லி வந்து உத்தராகண்ட் சுரங்க விபத்து நடத்த இடத்திற்குச் சென்றார்

மீட்புப் பணிகள் நடைபெறும் சுரங்கத்தின் வாயிலில் 11 நாட்களும் இருந்தார். 11 நாட்கள் என்றால் வந்து இறங்கியது முதல் 24 மணி நேரமும் அங்கே மக்கள் வழங்கிய சப்பாத்திகளை உண்டு மக்களோடு மக்களாக இருந்தார். சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையளித்தார், ஊடகங்கள் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதிலளித்தார், ஒரு தேசத்திற்கே நம்பிக்கையளிப்பது அத்தனை சுலபமான காரியமா என்ன?  கடும் குளிரில் அங்கே இருந்த ப்ளாஸ்டிக் நாற்காலியிலேயே அமர்ந்து கிடந்தார், கழிப்பறை குளியலறை வசதிகள் எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை அங்கே இருந்ததை வைத்துச் சமாளித்தார். 

41  தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்ட பிறகு நள்ளிரவில் தான் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினார். இந்திய மனங்களை வென்றுவிட்டுக் கிளம்பும் மற்றும் ஒரு ஆஸ்திரேலி யராக வரலாற்றில் இடம் பெறுவார் அர்னால்டுடிக்ஸ்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *