பெரியார் பன்னாட்டமைப்பு – அமெரிக்காவில் அரும்பணியாற்றி, வட கரோலினா மாநிலத்தில் கேரி எனும் ஊரில் வசிக்கும் தோழர் மோகன் வைரக்கண்ணு தாயார் மாரியம்மாள் (சனவரி 18) சென்னையில் மறைந்து விட்டார். அவருக்கும், அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்க லைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
– – – – –
தருமபுரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் மூக்கனூர்பட்டி இராமசாமியின் வாழ்விணையர் சின்னப்பிள்ளை (வயது 95) 17.1.2023 அன்று மூக்கனூர்பட்டியில் உள்ள மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் கவிஞர் கண்ணிமை இல்லத்தில் மறைவுற்றார். அவரது உடலுக்கு கழகத்தின் சார்பில் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி செயலாளர் தீ.சிவாஜி, ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலை வர் பெ.அன்பழகன், ஒன்றியத் தலைவர் தனசேகரன், ஒன்றிய அமைப்பாளர் இளங்கோ, பேராசிரியர் அசோகன், தமிழ்மணி, சேட்டு ஆகியோர் கலந்து கொண்டு உடலுக்கு மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். மறைவுற்ற சின்னப்பிள்ளையின் உடல் எவ்வித மூடச் சடங்குகளும் இன்றி எளிய முறையில் அடக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.