இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வால்மீகி எழுதிய ராமன் சரித்திரம் (ராம்சரித்மனாஸ்), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சூத்திரர்கள் என இழிவுபடுத்துகிறது என உ.பி. சமாஜ்வாடி கட்சியின் தலைவர் களில் ஒருவரான சுவாமி பிரசாத் மவுரியா கூறியுள்ளார். இதே கருத்தை சில தினங்களுக்கு முன் பீகாரில் ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் சந்திரசேகர் தெரிவித்திருந்தார்.
* “இந்தியா: மோடி குறித்த கேள்வி” என்ற ஆவணப் படத்திற்கான இணைப்புகளைத் தடுக்குமாறு சமூக ஊடக தளங்களான ட்விட்டர் மற்றும் யூடியூப் தளங்களுக்கு மோடி அரசு உத்தரவிட்டது. ஆனால் இந்த தடையை நாங்கள் ஏற்க மாட்டோம் என அப்படத்திற்கான இணைப்பை திர்ணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகுவா மைத்ரா மற்றும் டிரக் ஓ பிரைன் தெரிவித்தனர்.
தி டெலிகிராப்:
* கரோனா காலத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு “பிடித்த நண்பரின்” செல்வம் எவ்வாறு எட்டு மடங்கு அதி கரித்தது என்று ராகுல் காந்தி வியப்பு. 2020-2021இல் அதானி தினசரி ரூ. 1,002 கோடி சம்பாதித்ததாக பன்னாட்டு ஏஜென்சி களின் கண்டுபிடிப்புகளை மேற்கோள் காட்டி காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* 9 ஆண்டுகால மோடி ஆட்சியில் இந்தியரின் மொத்த கடன் ரூ.55 லட்சம் கோடியில் இருந்து ரூ.155 கோடியாக, அதாவது 2.5 மடங்கு அதிகரித்துள்ளது என காங்கிரஸ் குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா