புதுக்கோட்டை, ஜன. 23- புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் மனிதக் கழிவு கலக்கப் பட்ட குடிநீர்த் தொட்டிக் குப் பதிலாக, புதிய மேல் நிலை குடிநீர்த் தொட்டி கட்டுவதற்கு ரூ.9 லட் சத்தை தனது தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்ய மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா பரிந்துரை செய்துள்ளார். வேங்கைவயலில் உள்ள 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந் தத் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகிக்கும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர், அப்பகுதியினரின் கோரிக்கையை ஏற்று, மனிதக் கழிவு கலக்கப்பட்ட குடிநீர்த் தொட்டிக்குப் பதிலாக புதிய மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டும் பணி அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்தின் மூலம் அதே பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தனது தொகுதி நிதியில் இருந்து மேல்நிலை குடி நீர்த் தொட்டி கட்டுவ தற்கு ரூ.9 லட்சத்தை ஒதுக்கீடு செய்ய புதுக் கோட்டையைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப் பினர் எம்.எம்.அப்துல்லா (திமுக) பரிந்துரை செய் துள்ளார். இதற்கான கடிதத்தை மாவட்ட ஆட்சியருக்கு நேற்று முன்தினம் (21.1.2023) அவர் அனுப்பியுள்ளார்