வெட்டிக்காடு, ஜன. 27- வெட்டிக்காடு, பெரியார் மெட்ரிக்குலேசன் பள்ளியில் 26.1.2023 அன்று மதியம் 2.00 மணியளவில் 16ஆவது ஆண்டு விளையாட்டு விழா மாவட்ட கல்வி அலுவலர், தனியார் பள்ளிகள் அமலா தங்கத்தாய் முன்னிலையில் இனிதே நடைபெற்றது.
பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார். பள்ளியின் முதல்வர்
சு.சாந்தி வரவேற்புரை வழங்கினார். பல்வேறு போட்டிகளில் பங்கு கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன. மாணவர்களின் விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக கண்கவரும் வகையில் நடைபெற்றது. பெற்றோர்கள் இவ்விழாவில் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
பள்ளி ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து விழாவை சிறப்புற நடத்தினார்கள். அறிவியல் ஆசிரியை அமுதவள்ளி நன்றியுரை வழங்க, நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே முடிவடைந்தது.