மதுரை திறந்த வெளி மாநாடு

3 Min Read

 மக்கள் உணர்வின்  சீற்றம் – எழுச்சியின் அடையாளம்!

சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்த வெளி மாநாடு மதுரை பழங்காநத்தத்தில் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் வெகு எழுச்சியுடன் நடைபெற்றது. ஊர் எங்கும் சுவர் எழுத்துகள், கழகக் கொடிகளின் அணி வகுப்பு, பிரமாண்டமான மேடை, சிறப்பான ஒலி – ஒளி அமைப்புகள் என்று கண்ணையும், கருத்தையும் கொள்ளை கொண்டன.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திறந்த வெளி மாலை நேர மாநாட்டில் மாநகர மாவட்டத் தலைவர் அ. முருகானந்தம் வரவேற்புரையாற்றினார்.

தென் மாவட்ட திராவிடர் கழக பிரச்சாரக் குழுத் தலைவர் தே. எடிசன்ராசா, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா. நேரு, திராவிடர் கழக மாநில சட்டத்துறை செயலாளர் மு. சித்தார்த்தன், திராவிடர் கழக மாநில சட்டத் துறைத் துணைச் செயலாளர் நா. கணேசன், மதுரை மாநகர மாவட்டக் காப்பாளர் சே. முனியசாமி, மதுரை மண்டலக் கழகத் தலைவர் கா. சிவகுருநாதன், புறநகர் மாவட்டக் கழகத் தலைவர் சுப. தனபாலன், மதுரை மண்டலக் கழக செயலாளர் நா. முருகேசன், புறநகர் மாவட்டக் கழகச் செயலாளர் த.ம. எரிமலை, திண்டுக்கல் மாவட்டக் கழகத் தலைவர் இரா. வீரபாண்டி, கம்பம் மாவட்டக் கழகத் தலைவர் வெ. தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. செயக்குமார், மாநிலக் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பு செய்தனர்.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத் தலைவர் வா. நேரு, ஆதித் தமிழர் பேரவையின் கலை இலக்கிய அணி மாநில செயலாளர் இரா. செல்வம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சார்பாக வழக்குரைஞர் இராம. வைரமுத்து, தமிழ்ப் புலிகள் நிறுவனத் தலைவர் நாகை திருவள்ளுவன், அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன், வல்லரசு பார்வர்டு பிளாக் நிறுவனத் தலைவர் பி.என். அம்மாவாசி, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன், தி.மு.க. உயர்மட்ட செயல் திட்டக் குழு உறுப்பினர் மேனாள் அமைச்சர் பொன். முத்து இராமலிங்கம், மதிமுக அரசியல் ஆய்வு மய்யச் செயலாளர் பொறியாளர் மு. செந்தி லதிபன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் என். பெரியசாமி, பேராசிரியர் அருணன் (சி.பி.எம்.) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மக்களவை உறுப்பினர் கே.நவாஸ்கனி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் எம்.பி., தமிழ்நாடு நிதி மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் மாண்புமிகு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி, தி.மு.க.வின் பொருளாளரும், மக்களவை உறுப்பினரும், ஒன்றிய அமைச் சராக இருந்த நிலையில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் செயல்பாட்டுக்குப் பொறுப்பேற்று, பெரும் பணியை முடித்த சாதனை நாயகருமான டி.ஆர். பாலு ஆகியோர் உரையாற்றி யதைத் தொடர்ந்து மாநாட்டின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமை நிறைவுரையை வழங்கினார். மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் சுப. முருகானந்தம் நன்றியுரை ஆற்றினார்.

வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் 

பி. மூர்த்தி, தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினர் கோ. தளபதி தி.மு.க. தணிக்கைக் குழு உறுப்பினர் வ. வேலுச்சாமி, தி.மு.க. செயல் திட்டக் குழு உறுப்பினர் பெ. குழந்தைவேலு, மாவட்ட தி.மு.க. செயலாளர் மு. பூமிநாதன், அகில இந்திய பார்வேர்டு பிளாக் பொதுச் செயலாளர் வி.வி. கதிரவன்,   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ப. கதிரவன், மதுரை மாவட்ட திராவிடர் கழக அமைப்பாளர் இரா. திருப்பதி முதலியோர் பங்கேற்றனர்.

மதுரை பழங்காநத்தம் மக்கள் வெள்ளத்தால் அலை மோதியது. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பொது மக்கள் பெரும் அளவில் கூடியதும் தலைவர் பெரு மக்களின் உரைகளை வரவேற்கும் வகையில் கரஒலியும் முழக்கமும் அவ்வப் பொழுது எழுந்த காட்சி, வஞ்சிக்கப்படும் தமிழ்நாட்டின் எதிர்ப் புக் குரலாய் – புயலாய் அமைந்தது என்பதில் அய்யமில்லை.

குறிப்பாக – சிறப்பாகச் சொல்ல வேண்டுமானால் மதுரை மாநாடு தமிழின மக்களின் உணர்வை வெளிப்படுத்திய  வரலாற்றுக் கல்வெட்டாக – சீற்றக் குரலாக அமைந்தது என்பதில் அய்யமில்லை.  

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *