களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்
காரமடை, ஜன. 28- பிப்ரவரி 5ஆம் தேதி காரமடை யில் ஆசிரியர் பங்கேற்று சிறப்புரை ஆற்ற உள்ள சமூக நீதி பாதுகாப்பு திராவிட மாடல் விளக்கப் பொதுக்கூட்டத்திற்கான அழைப்பிதழை பெரியாரியல் கொள்கை உணர்வாளர்கள், தோழமைக் கட்சியினர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களை சந் தித்து வழங்கும் பணி மாவட்ட தலைவர் சு.வேலுச்சாமி தலை மையில் 22.1.2023 அன்று தொடங்கியது.
ஜன 22, காலை 10 மணி அள வில் கனுவாய்பாளையம் பிரிவில் உள்ள தோழர் லோகநாதன் அவர்களிடம் கூட்டத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. பொதுக்கூட்டம் சிறப்பாக நடை பெற தமது பங்களிப்பாக ரூ 5 ஆயிரம் நன் கொடை வழங்கினார்.
காலை 11 மணி விஜயநகரம் திமுக திருவேங்கிடசாமி அவர்களி டம் கூட்டத்திற்கான அழைப்பிதழ் வழங்கப்பட்டது. பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தமது பங் களிப்பாக ரூ 5 ஆயிரம் நன்கொடை வழங்கினார். கூட்டத்திற்கு தமது பங்களிப்பாக ரூ 5 ஆயிரம் நன்கொடை வழங்கினார்.
12, மணி கனுவாய்பாளையம் பகுதியில் புதிதாக தொடங்கப் பட்ட ஜெஜெ கிளினிக் மருத்துவர் அவர்களை சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பெரியார் பெரியார் தொண்டர் சாலை வேம்பு சுப்பையன், கார மடை ஒன்றிய தலைவர் அ.மு. ராஜா, கழக தோழர் முருகேசன், மற்றும் திமுக இளைஞரணி சாலைவேம்பு குணசேகரன் ஆகி யோர் பங்கேற்றனர்.