பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி கட்டித் தர முதலமைச்சரிடம் கோரிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல்

Viduthalai
1 Min Read
தமிழ்நாடு

சென்னை, பிப். 1- பன்னாட்டுப் பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு சென்னையில் தங்கும் விடுதி கட்டித்தர முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்படும் என காவல் ஆணை யர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு பணியிலும், குடும்ப வாழ்க்கையிலும் திறமை யாக இருப்பதற்காக ‘ஆனந்தம்’ என்ற திட்டத்தின்கீழ் மனநலப் பயிற்சி, உறவுகள் மேலாண்மை, சவாலான நேரத்தை சமாளிப்பது, நேர மேலாண்மை, யோகா உள் ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக் கப்படுகிறது. இந்த பயிற்சி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பெண் காவலர்கள் தொடங்கி பெண் ஆய்வாளர்கள் வரை 2,216 பேர் பயிற்சி பெற்றனர்.

இத்திட்டத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழா, வேப்பேரியில் நேற்று (31.1.2023) நடைபெற்றது. 

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேசியதாவது:

 பிற மாவட்டங்களில் இருந்து சென்னை வந்து பணிபுரியும் திருமணமாகாத பல பெண் காவ லர்கள், தனியாக அறை எடுத்தோ அல்லது நண்பர்களின் வீடுக ளிலோ தங்கும் சூழல் உள்ளது. இதில், அவர்களுக்கு பல்வேறு சிரமங்கள் உள்ளன.

இந்த சிரமத்தை போக்கும் வகையில் பன்னாட்டுப் பெண்கள் தினத்தை முன்னிட்டு சென்னையில் பெண் காவலர்களுக்காக 400 பேர் தங்கும் வகையில் விடுதி கட்டித்தர வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்க உள்ளேன். 

விளையாட்டுத் துறையில் பெண் காவலர்கள் மேலும் சிறந்து விளக்கும் வகையில் தரமான பயிற்சியாளர்கள் ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்நி கழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணை யர் லோகநாதன், இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *