கல்லக்குறிச்சி,பிப்.1– கல்லக் குறிச்சி மாவட்டம், மண லூர்பேட்டை அடுத் துள்ள தேவரடியார் குப்பம் கிராமத்தில் ஆ. முனுசாமி அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி 26.01.2023 வியாழன் காலை 11 மணிக்கு மாவட்டத் தலைவர் ம. சுப்பராயன் தலைமையில் நடைபெற்றது.
திருக்கோவிலூர் ஒன்றிய கழகத் தலைவர் மு.இளங்கோவன் வரவேற்புரை ஆற்றினார்.
மணலூர்பேட்டை நகரத்தலைவர் சி.அய்ய னார், செயலாளர் பா. சக்தி, மணலூர்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலா ளர் ஓய்வு பெ.முனியன், கழக பொதுக்குழு உறுப் பினர் தி.பாலன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
மறைந்த ஆ. முனு சாமியின் படத்தை கழக பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன் திறந்து வைத்து, நினைவேந்தல் உரையாற் றினார்.
அவர் தனது உரையில், “ஆ.முனுசாமி அவர்கள் திராவிடர்கழகக் கொள் கைகளை தனது வாழ் நாளின் இறுதிவரை கடைபிடித்தவர். அவர் தனது பிள்ளைகள் பழ னிசாமி, இளங்கோவன், அருள்மொழி, சித்ரா, செல்வி ஆகியோரை பெரியாரின் சிந்தனை களை ஊட்டி வளர்த்து, அவர்கள் அனைவரையும் ஆசிரியர்களாக, வரு வாய்த்துறை அதிகாரி களாக, மருத்துவத்துறை அலுவலர்களாக, பொறி யாளர்களாக உருவாக்கி யுள்ளார். தன்னுடைய இளமைக் காலத்தில் இதே ஊரில், அவர் வாழ்ந்த இதே வீட்டில் ஓர் பள் ளியை நிறுவி ஆசிரியரா கச் சிலகாலம் பணிபுரிந் துள்ளார். பிறகு இவ்வூ ரின் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டபோது, பள்ளியை அரசாங்கத்தி டம் ஒப்படைத்து விட்டார். ஊராட்சி மன் றத் தலைவராக இருந்து இவ்வூருக்கு வேண்டிய அனைத்து உதவிகளை யும் செய்துள்ளார். இத னால் ஊர் மக்களின் அன்பைப் பெற்று பெரி தும் போற்றப்பட்டார். தந்தை பெரியார் நடத்திய விடுதலை நாளிதழை வாங்கிப்படித்து, அவரின் சிந்தனைகளை தன் குடும் பத்தினரும், உறவினர்க ளும் பின்பற்றும்படிச் செய்தார். இவ்வூராரும் பெரியாரின் சிந்தனை களை உள்வாங்கினார் கள். இதனால் முனுசாமி அய்யாவின் குடும்பப் பெருமை சுற்றுப்புற கிராம மக்களிடமும் வெகு வாகப் பரவியது.
தனது இல்ல நிகழ்ச் சிகள் அனைத்தையும் பெரியார் வழியில் நடத்தி, இவ்வூர் மக்களிடம் மூடநம்பிக்கைகளை ஒழிப்பவராக இருந்துள் ளார். கிட்டத்தட்ட 94 வயது வரை வாழ்ந்துள் ளார்.
பொதுவாக, திராவி டர் கழகக் கொள்கை களை பெரியாரின் பகுத் தறிவுக் கொள்கைகளை கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சமூகத்தின் மீது பற்றுள்ளவர்கள், தன்னைச் சுற்றியுள்ள சமூகத்திற்கு பயனுள்ள செயல்களைச் செய்வார் கள். இதன்படியே முனு சாமி அவர்களும் வாழ்ந் துள்ளார்.
இப்படத் திறப்பு நாளில் அவரைப் படமாகக் கருதாமல் அவர் வாழ்ந்த வாழ்க்கையை பாடமாகக் கொண்டு அவரின் உற்றார் உறவி னர்கள், நண்பர்கள் செயல்பட வேண்டும்” என்று கூறி முடித்தார்.
இதனைத் தொடர்ந்து அவருடன் பணிபுரிந்த பிரபாகரன் ஆசிரியர், அவரின் மகள் சித்ரா, உறவினர் கோ.கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் இரங் கலுரை ஆற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் திருக்கோவிலூர் ஒன்றிய திராவிடர் கழகத் தலை வர் கருப்புச்சட்டை ஆறு முகம், வடகரை தாழனூர் கிளைக்கழகத் தலைவர் மு.சேகர், கொல்லூர் (அரகண்டநல்லூர்) கிளைக்கழகத்தலைவர் பா.சக்திவேல், ஜம்பை கிளைக்கழகத் தலைவர் அ.தமிழரசன்; செயலா ளர் வை.சேகர், மணலூர் பேட்டை மேனாள் தலை வர் ராசேந்திரன், சங்கரா புரம் ஒன்றிய திராவிடர் மாணவர் கழகத்தலைவர் மா.ஏழுமலை உள்பட பலர் கலந்து கொண்ட னர்.