வல்லம், பிப். 7- இந்திய பாரவாலி வாலிபால் அசோசியேசன், தமிழ்நாடு பாராவாலி அசோசி யேசன், தஞ்சை மாவட்ட பாரவாலி அசோசியேசன் மற் றும் உணர்வுகள் அறக்கட்டளை ஈரோடு, இணைந்து நடத்தும் 11ஆவது சீனியர் மாற்றுத் திறானாளிகள் பங்குபெறும் அகிய இந்திய சிட்டிங் வாலிபால் போட்டியானது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) பல்நோக்கு உள்விளையாட்ட ரங்கில் நடைபெற்றது. மாநில பாராவாலி அசோசியேசன் தலை வர் டாக்டர் மக்கள் ஜி.ராஜன் வரவேற்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தனது உரையில் போட்டியில் கலந்து கொள்ள வந்த அனைவரையும் வாழ்த்திப்பேசினார். பல்வேறு உயரங்களை அடைய வேண்டும் என வாழ்த்தினார்.
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி போட்டியை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அவர் தமது உரையில், மாற்று திறனாளிகள் மேம்பாட்டை கருத்தில் கொண்டு இத்துறையினை தன் பொறுப்பிலே வைத் துக்கொண்டு செயல்படுத்துகி றேன் என்றார். போட்டியில் கலந்து கொண்டவர்களை வாழ்த்தி விளையாட்டு நிகழ்வு களை நினைவுபடுத்தினார்.
இந்திய அளவில் 15 மாநிலங் களிலிருந்து விளையாட்டு வீரர் கள் பங்கு பெற்றுள்ளனர். இவற் றுள் 15 ஆண்கள் அணியும், 9 பெண்கள் அணியும் இந்த போட் டியில் கலந்துகொண்டார்கள்.
இதனை தொடர்ந்து சட்ட மன்ற உறுப்பினர் கூ.மு.ழு.நீல மேகம், தஞ்சை மத்திய மாவட்ட கழக செயலாளர் துரை சந்திர சேகரன், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன் இராமநாதன், தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் மு.சரவணக்குமார், அர்ஜுன் விருதுபெற்ற கிரிஸ், தங்கவேலு மாரியப்பன், சுக்பீர் சிங், து.சந் திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடக்க விழாவில் பல்கலைக் கழக ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் வீ.அன்புராஜ், பல்கலைக்கழக துணை வேந்தர் பேரா செ.வேலுசாமி, பதிவா ளர், பு.கு.சிறீவித்யா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, புல முதன்மையர்கள், இயக்குநர்கள், பல்வேறு துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் ஆகி யோர் கலந்துகொண்டனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்கள் டாக்டர் மக்கள் ஜி.ராஜன், தலைவர் – தமிழ்நாடு பாரா வாலிபால் அசோசியேஷன் மற்றும் சி.ராஜா, டாக்டர் கூ. கிருஷ்ணசாமி வாண்டையார் துணை தலைவர், – தலைவர், தஞ்சாவூர் தடகள சங்கம், தமிழ்நாடு பாரா வாலிபால் சங்கத்தின பொதுச் செயலாளர் அவர்களும், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி அசோசியேசன் மு.இராம ராதன் துளசி வாண்டையார், மாவட்ட செயலாளர் செந்தில் வாழ்த்துரை வழங்கினார்கள்.
இறுதியாக மாநில பொதுச் செயலாளர், தமிழ்நாடு பாரா வாலி அசோசியேசன் ராஜா நன்றியுரை ஆற்றினார்.