காரைக்கால், பிப். 7- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஈரோடு முதல் கடலூர் வரை நடைபெறும் சமூகநீதி திராவிட மாடல் பாதுகாப்பு பிரச்சார பயணக் கூட்டம் காரைக்காலில் எதிர்வரும் 6-3-2023 அன்று நடைபெற இருப்பதால் அதன் தொடர்பாக காரைக்கால் மண்டல திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 31-1-2023 அன்று காலை 10 மணி அளவில் காரைக்கால் தமிழ் பழச்சாறு நிலையத்தில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில திராவிட கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் நடைபெற்றது.
காரைக்கால் மண்டல திராவிடர் கழக தலைவர் குரு. கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்துகொண்டு ஆசிரியர் வருகை குறித்தும் பொதுக் கூட்டம் நடத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை களை வழங்கினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் மேற்கொள்ளும் ஈரோடு முதல் கடலூர் வரை நடை பெறும் சமூக நீதி காப்பு திராவிட மாடல் விளக்க பரப் புரை (0 3-02-2023 முதல் 10-04-2023) வரை நடைபெறும் தொடர்பயண பொது கூட் டத்தை 06-03-2023 அன்று காரைக்காலில் மிக எழுச்சியுடன் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது,
2. பரப்புரை பயண பொதுக்கூட்டத்தை விளக்கி சுவர் எழுத்து விளம்பரம், உள்ளூர் தொலைக்காட்சி விளம்பரம், பிளக்ஸ் விளம்பரம், கடைவீதி வசூல் பிரச்சாரம் உள்ளிட்ட அனைத்தையும் கழத்தவர்கள் இணைந்து செயல்படுத்துவது என முடிவு செய்யப் படுகிறது
3. பரப்புரை பயண பொதுக்கூட்டத்தை காரைக்காலில் நடத்துவதற்கு அனுமதி அளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் காரைக்கால் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு எழுச்சியான வரவேற்பு அளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
4. காரைக்கால் மண்டல சமூக வலைதள தொழில் நுட்பக் குழு தலைவராக பொன். பன்னீர் செல்வமும் செயலராக மு.பி. பெரியார் கணபதி அவர்களும் தேர்வு செய்யப்பட்டு கழக பொதுச் செயலாளர் தஞ்சை ஜெயக் குமாரால் அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் காரைக்கால் மண்டல செயலாளர் பொன் பன்னீர்செல்வம், காரைக்கால் மண்டல பொதுக்குழு உறுப்பினர் ஜெய்சங்கர், காரைக்கால் மண்டல இளைஞரணி செயலாளர் மு.பி. பெரியார் கண பதி, காரைக்கால் மண்டல இளைஞர் அணி அமைப்பா ளர் மு.க.ஸ்டாலின், காரைக்கால் மண்டல மாணவர் அணி செயலாளர் பிளமன் என்கிற அறிவு செல்வம், காரைக்கால் மண்டல மாணவர் கழகத் தோழர்கள் சசி குமார், சிவபுகழ் ஆகிய தோழர்கள் கலந்து கொண் டனர். இறுதியாக மாணவர் கழகச் செயலாளர் பிளமன் நன்றி கூறினார்.