சென்னை, நவ. 1- தமிழ்நாடு மாநில நீதிப் பணியில் அடங்கிய உரிமையியல் நீதிபதி பதவிக்கான முதன்மை தேர்வுக்கான அனுமதி சீட்டு வெளியாகியுள்ளது. தமிழ் நாடு மாநில நீதித்துறை பணியில் உரிமையியல் நீதிபதி பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான ஆட்சேர்க்கை அறிவிக்கை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வா ணையம் கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி வெளியிட்டது.
இந்த பதவிக்கான, முதல் நிலை (Prelims) எழுத்துத்தேர்வு 19.08.2023 அன்று மாநிலத்தின் பல்வேறு மாவட் டங்களில் நடைபெற்றது. இந்த தேர் வில் தேர்ச்சிப் பெற்றவர்கள் தேர்வு எண்கள் ஏற்கெனவே அறிவிக்கப் பட்டன.
இந்நிலையில், இப்பதவிக்கான முதன்மை எழுத்துத் தேர்வு, சென்னை தேர்வு மய்யத்தில் வரு கிற 04.11.2023, 05.11.2023 ஆகிய தேதிகளில் முற்ப கல் மற்றும் பிற்பகலில் நடைபெற உள்ளது. இதற்கான, தேர்வு அனுமதி சீட்டு தற்போது வெளியிடப்பட் டுள்ளது. தேர்வு எழுத அனுமதிக் கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வு அனுமதிச் சீட்டுகள் தேர் வாணையத்தின் இணைய தளமான www.tnpsc.gov.in மற்றும் ஷ்ஷ்ஷ்.www.tnpscexams.in இல் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களுடைய ஒருமுறை பதிவேற்றம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து அனுமதிச் சீட்டை பதிவி றக்கம் செய்ய முடியும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.