பரிகாரப் பூஜை செய்வதாகக் கூறி பெண்களிடம் அத்துமீறிய ஜோதிடர்

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 2– பரிகார பூஜை செய்தவதாக பெண்களைத் தனியாக அழைத்து ஜோதிடர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். ஜோதி டரைப் பிடித்துக் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னையைச் சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் அய்.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு சமூக வலைத்தளம் மூலம் கோவை மாவட்டம் பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஒருவர் அறிமுகமானார். அவ ரிடம் தனது குடும்பப் பிரச்சினைகளைக் கூறி, அந்தப் பெண் தீர்வு கேட்டுள்ளார். அதற்கு அந்த ஜோதிடர், ‘‘உங்களது தந்தையின் ஜாதகத்தில் தோஷம் உள்ளது, அதற்குப் பரிகாரம் செய்ய வேண்டும்’’ என்று கூறினார். பின்னர் அந்தப் பெண்ணின் வீட்டுக்கே சென்று பரிகார பூஜை செய்தார். தொடர்ந்து அந்தப் பெண்ணிடம் சமூக வலைத்தளம் மூலம் பேசி வந்த அந்த ஜோதிடர், உங்களது ஜாதகத்திலும் திருமண தோஷம் உள்ளது. அதற்குத் தனியாக பரிகார பூஜை செய்ய வேண்டும் என்று கூறினார்.

பின்னர், அந்தப் பெண்ணை தனியாக புதுச்சேரிக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக் கூறி, அத்துமீற முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்ட அந்தப் பெண், அவரிடம் இருந்து தப்பி சென்னைக்குத் திரும்பினார். பின்னர் மீண்டும் அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு பேசி வந்த ஜோதிடர், பரிகார பூஜை செய்ய வேண்டும் எனக் கூறி, மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு அழைத்தார்.

அங்கு அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தைக் கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அதன்பிறகு சென்னை திரும்பிய அந்தப் பெண்ணின் கைப்பேசி அழைப்புகளை ஜோதிடர் தவிர்த்து வந்தார். பின்னர் அவர் குறித்து அந்தப் பெண் விசாரித்தபோது ஏற்கெனவே திருப்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணை இதுபோன்று ஏமாற்றி இருப்பது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், சென்னை மேற்கு தாம்பரம் இணை ஆணையரிடம் புகார் அளித்தார். அத்துடன் அந்த ஜோதிடரால் பாதிக்கப்பட்ட திருப்பூரைச் சேர்ந்த பெண், கோவை மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளரிடம் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார்களின் அடிப்படையில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், அந்த ஜோதிடரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர் மேலும் பல பெண்களிடம் ‘பரிகாரம்’ என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற தகவல் கிடைத்து உள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *