பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலை.) நடத்திய பள்ளி – கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற ‘சமத்துவ மாரத்தான்’

2 Min Read
- Advertisement -

மதுரை, நவ.2 தஞ்சை வல்லத்தில் இயங்கி வரும் பெரியார் மணியம்மை  அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக் கழகம்) –உள்பட மதுரையில் நேற்று (1.11.2026) அன்று காலை மதுரை உலகத்தமிழ் சங்கத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 800க்கும் அதிகமான பள்ளி, கல்லூரி மாணவ –- மாணவிகள் கலந்து கொண்டனர்.

உலகத் தமிழ்ச்சங்கத்தில் தொடங்கிய மாரத்தானின் ஆண்கள் பிரிவுக்கு மதுரை மாநகரத்தின் பொறுப்பு மேயர் டி.நாகராஜன் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். அதற்குப்பின் பெண்கள் பிரிவுக்கு பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணைத் தலைவர் வீ.அன்புராஜ்   முன்னிலையில் அன்னை வசந்தா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி பழனி முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக  விழாவிற்கு வருகை தந்த மேயர் டி.நாகராஜன், யாதவர் கல்லூரி தாளாளர் கேபிஎஸ்.கண்ணன், தேவசகாயம் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் தே.எடிசன்ராஜா, ஆதித்யா, குறிஞ்சி அக்ரோபிராடக்ட் பார்ட்னர் அ.முருகானந்தம் ஆகியோருக்கு பல்கலைக்கழகதுணைத்தலைவர் வீ.அன்புராஜ் சால்வை அணிவித்து நினைவுப் பரிசுகளையும் புத்தகங்களையும் வழங்கி நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு

இந்த சமத்துவ மாரத்தான் சிறப்பாக நடைபெற இணைந்து செயலாற்றிய விஆர்கே கன்ஸ்ட்ரக்சன் ராஜ்குமார், செயின்ட் ஜான்’ஸ் மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் டாக்டர் அருண் பிரசாத், விஎஸ்வி கன்ஷட்ரக்சன் வி.கணேசன் யானைமலை விளையாட்டு அறக்கட்டளை  பழ.இளங்குமரன், ஓம் முருகா சாரீஸ் சார்பாக சுப.முருகானந்தம், சிக்மார்க் மசாலா உரிமையாளர் எஸ்.இராஜா, அன்னை வசந்தா அறக்கட்டளைத் தலைவர் அமுதவள்ளி பழனி முருகன், சித்தன்அறக்கட்டளை சார்பாக  க.சிவா  ஆகியோருக்கு சிறப்பு செய்யப்பட்டது. மேலும் பாண்டா எண்டர்பிரைசஸ்உரிமையாளர் பிரதாப்சிங், தைரோகேர் மணிகண்டன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. ஆண்கள் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசு 7,000, இரண்டாம் பரிசு 5,000, மூன்றாம் பரிசு 3,000, ஆறுதல் பரிசு 500 வீதம் 14 பேருக்கு வழங்கப்பட்டது. இச்சமத்துவ மாரத்தானை உடற்கல்வி இயக்குநர் செல்வகுமார், மகாலிங்கம், உடற்கல்வி ஆசிரியர் சரவணன், வினோத் கண்ணன் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் உடற்கல்வி இயக்குநர் இரமேஷ், இணைப் பேராசிரியர் இளங்கோவன் ஆகியோர் துணை நின்றனர். அனைவருக்கும் வே.செல்வம் நன்றி கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *