நீதித்துறையில் பார்ப்பன நாயகமா?

2 Min Read
- Advertisement -

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நீதித்துறை மற்றும் தேர்தல் ஆணையம் போன்ற தன்னாட்சி அமைப்புகளின் நடுநிலைமை குறித்து மீண்டும் காரசாரமான விவாதங்கள் எழுந்துள்ளன. அண்மையில் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த பட்டியல் மற்றும் உத்தரப் பிரதேச மாநில தேர்தல் ஆணையரின் பின்னணி குறித்த தகவல்கள், ‘இத்தகைய அமைப்புகள் எந்த அளவிற்குப் பாரபட்ச மின்றிச் செயல்பட முடியும் என்ற கேள்வியை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளன.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்காக உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் வழக்குரைஞர் மிருணாள் எல்கர் என்பவரின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவர், அம்மாநில பா.ஜ.க. மகிளா மோர்ச்சாவின் முன்னாள் தலைவரான லதா எல்கரின் மகள் ஆவார்.

இதுமட்டுமின்றி, அண்மைக்கால நியமனங்களில் பெரும்பாலானோர் பார்ப்பன வகுப்பைச் சேர்ந்தவர் களாகவும், ஏதேனும் ஒரு வகையில் பா.ஜ.க.வின் பின்னணி கொண்டவர்களாகவும்  உள்ளனர்.

டாக்டர் விவேக் சர்மா ராஜேஷ்குமார் சுக்லா, கனக்கஹ கர்வார், பக்திவயாஸ், ஸ்ரேயஸ் பண்டிட், மிருணாள் மஜும்தார், அவிநாஸ் ஜர்கர் – இதில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் பார்ப்பனர்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

சத்தீஸ்கரில் உயர் நீதிமன்ற நீதிபதி நியமனத்திலும் கொலீஜியம் பரிந்துரை செய்த 6 பெயர்களும் பார்ப்பனர்களே என்பது அதிர்ச்சிக்குரியது.

சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கான உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைக்கு ஒப்புதல் அளிக்கப் பட்டு அதிகாரப்பூர்வப் பட்டியல் வெளியாகியுள்ளது.

கொலீஜியம் பரிந்துரைத்துள்ள இந்த 6 பேரில் 4 பேர் வழக்குரைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள்; 2 பேர் நீதித்துறை அதிகாரிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

பரிந்துரைக்கப்பட்டுள்ளவர்களின் விவரம்:

வழக்குரைஞர் பிரிவு:

ஆனந்த் சுக்லா, ரத்ன நிதி புஷ்டி, ஷசாங்க் தாகூர், சவுரப் சர்மா.

நீதித்துறை அதிகாரி பிரிவு:

ரஜ்னீஷ் ஸ்ரீவஸ்தவா, பலராம் பிரசாத் வர்மா.

உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் இந்த ஒப்புதலைத் தொடர்ந்து, ஒன்றிய அரசின் பரிந்துரையுடன் குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதன்பின் இவர்கள் அனைவரும் புதிய நீதிபதிகளாகப் பொறுப்பேற்றுக் கொள்வார்கள்.

கடந்த அக்டோபர் 26-ஆம் தேதி மத்தியப் பிரதேச மாநில உயர் நீதிமன்றத்திற்கு கொலீஜியத்தால் நீதிபதிகள் நியமிக்கப்பட்ட போது, பரிந்துரைக் கப்பட்ட அனைவருமே பார்ப்பனர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்ற செய்தி வெளியாகி பெரும் விவாதத்தையும் சமூக நீதி ரீதியிலான விமர்சனங் களையும் ஏற்படுத்தியது.

அச்சர்ச்சை ஓய்வதற்குள், தற்போது சத்தீஸ்கர் மாநிலத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ள 6 நீதிபதிகள் பட்டியலிலும் பார்ப்பனர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே இடம்பெற்றுள்ளது மீண்டும் நீதித்துறை நியமனங்களில் பிரதிநிதித்துவம் மற்றும் சமூக நீதி குறித்த கேள்விகளையும் கடும் விவாதங்களையும் எழுப்பியுள்ளது.

இந்தியாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 1,122. தற்போது பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 830. காலி இடங்கள் 292.

மத்திய சட்ட அமைச்சகம் நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி 2018 முதல் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 75 முதல் 78 விழுக்காடு வரையிலான  நீதிபதிகள் பொதுப் பிரிவுச் சார்ந்தவர்கள். மீதமுள்ள 22 முதல் 25 விழுக்காட்டினர் பழங்குடியினர் பட்டிய லினத்தவர், பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர் ஆவர்.

‘‘சுதந்திரம் அடைந்த இந்தியாவில் டெமாக்ரசி இருக்காது; மாறாக பிராமினோக்கரசிதானிருக்கும்’’ என்று 1925ஆம் ஆண்டிலேயே தொலைநோக்கோடு தந்தை பெரியார் கணித்தது எத்தகைய பெரும் உண்மை என்பது இப்பொழுது புரிகிறதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *