இந்திய விமானிக்கு அமீரகத்தின் உயரிய விருது

1 Min Read
- Advertisement -

துபாய், அக். 29- துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நோக்கி 170-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஃபிளைதுபாய் விமானம், கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது ஓமன் நாட்டைச் சேர்ந்த உதவி விமானி, அவசர காலக் கோடரியால் இந்திய முதன்மை விமானி ஸ்மித் மச்சார் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்.  இதில் விமானம் பல அடி கீழே பாய்ந்தது. படுகாயமடைந்த நிலையிலும், விமானி ஸ்மித் மச்சார் விடாமுயற்சியுடன் காக்பிட் கதவை திறந்தார்.

இதனால் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை கட்டுப் படுத்தினர். இதையடுத்து, விமானத்தில் இருந்த மாற்று விமானிகள் அதை சவுதி அரேபியாவின் தபூக் நகரில் பாதுகாப்பாக தரையிறக்கினர். பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய கேப்டன் ஸ்மித் மச்சார் மற்றும் விமான ஊழியர்களின் தைரியமான இந்த செயலைப் பாராட்டி, அய்க்கிய அரபு அமீரகத்தின் ‘முதல் வகுப்பு சையத் II விருது’ அறிவிக்கப்பட்டது. துபாய் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் இவ்விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *