கைதிகள் தப்பினால் துப்பாக்கியால் சுடுங்கள் சிறைத்துறை தலைமை இயக்குநர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவு

2 Min Read
- Advertisement -

சென்னை, அக். 29- சிறையில் இருந்து கைதிகள் தப்பித்தல் போன்ற அசம்பா விதம் ஏற்பட்டால், சிறைத் துறையினர் சூழலுக்கு ஏற்ப துப்பாக்கியை பயன் படுத்திக் கொள்ள அனுமதி வழங்கி சிறைத் துறை தலைமை இயக்குநர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை புழல் மற்றும் தேனி சிறைகளில் இருந்து கைதிகள் அடுத்தடுத்து தப்பி ஓட்டம் பிடித்தனர். குறிப்பாக தேனியில் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தப்பிய கைதிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வந்தாலும், பலத்த பாதுகாப்பையும் மீறி தப்பியது பாதுகாப்பு குறைபாட்டை காட்டுவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இதுஒருபுறம் இருக்க, சிறைத் துறை அதிகாரிகளுடன் அப்பிரிவு தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் அண்மையில் ஆலோசனை நடத்தினார்.

மேலும், தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சிறைகளிலும் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உடனடியாக அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார். மேலும், குறைகள் இருப்பின் அதுகுறித்தும் தெரிவிக்கலாம் என தெரிவித்து இருந்தார். இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள மத்திய மற்றும் மாவட்டச் சிறைகளில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் துப்பாக்கியுடன் பணியில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்புவரை கண்காணிப்பு கோபுரங்களில் சிறைத் துறை காவல்துறையினர் துப்பாக்கியுடன் தான் கண்காணித்து வந்தனர். அதன் பிறகு அவை திரும்பப் பெறப்பட்ட நிலையில், மீண்டும் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிறைகளில் உள்ள கைதிகளின் நடமாட்டம் மற்றும் நகர்வுகளை உன்னிப்பாக கண்காணிக்கவும் சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. பார்வையாளர்கள் நேரத்தில் கைதிகளை யார் யார் சந்திக்கின்றனர்.

அதில், ஏதேனும் குற்ற சதித் திட்டம் உள்ளதா என சிறைத் துறை உளவுப் பிரிவினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட் டுள்ளது.

இந்நிலையில், சிறையில் இருந்து கைதிகள் தப்பிச் சென்றாலோ, தப்பும் நோக்கில் சிறைத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தினாலோ சிறைத் துறையினர் துப்பாக்கியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கி சிறைத் துறை தலைமை இயக்குநர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *