எனக்கு வேலைக்குப் போக எல்லாம் விருப்பம் இல்லை. ஆனால், சுவையாக சமைக்கப் பிடிக்கும். அதே சமயம் எனக்கான ஒரு வருமானம் வீட்டில் இருந்தபடியே பார்க் கவும் விருப்பம். என்ன செய்வது தெரிய வில்லையொன்ற பல பெண்கள் புலம்பு கிறார்கள். சமைக்கத் தெரிந்தாலே போதும் உங்களுக்கான வருமானம் உங்களைத் தேடி வரும். என்ன தான் ஓட்டல் உணவு மேல் மோகம் இருந் தாலும், வீட்டுச் சாப்பாட்டிற்கு என தனிப்பட்ட விருப்பம் உண்டு. அப்படிப் பட்ட சுவையான வீட்டு உணவினை உங்க ளின் உணவு மேசைக்கே கொண்டு வந்து தருகிறது ‘ஷீரோ ஹோம் புட்ஸ்’ நிறுவனம். பல்லாயிரக்கணக் கான இல்லத்தரசிகளின் பங்களிப்போடு இந் நிறுவனம் தற்போது, சமையல் துறையில் பங்களிப்பினை வழங்கி வருகிறது. இந்நிறு வனத்தின் ஒருங்கிணைப் பாளர் ஜெயசீறி கூறுகையில்:
‘‘நாங்க 15 ஆண்டுளாக உணவுத்துறையில் இருந்து வருகிறோம். கேட்டரிங், உணவகம் என அந்தத் துறையில் எங்களுக்கு தனிப்பட்ட அனுபவம் உண்டு. அதன் அடிப்படை யில் தான் ஊபர், ஸ்விகி போன்ற உணவு வணிக துறையினை ஆரம்பிக்க விரும்பினோம். அதற்கான ஆய்வில் இறங்கிய போது தான் கரோனா பாதிப்பு நம்மை முற்றிலும் புரட்டிப் போட்டது. அப்போது பலர் ஓட்டல் உண வினை விட வீட்டுச் சாப்பாட்டின் தேவை அதிகமாக இருந்ததை உணர்ந்தோம்.
இணையதள உணவு வணிகங்கள் எல்லாரும் ஓட்டலில் இருந்து தான் உணவினை வீட்டில் விநியோகம் செய்கிறார்கள். அதையே ஏன் வீட்டில் இல்லத்தரசிகள் சமைக்கும் உணவினை வழங்கக் கூடாது! என்ற எண்ணம் ஏற்பட்டது. விரும்பிய உணவினை ஓட்டலில் ஆர்டர் செய்து சாப்பிடுகிறார்கள். ஆனால் வீட்டுச் சாப்பாட்டினை ஒவ்வொரு ஏரியாவிலும் பெண்கள் ஏதோ ஒரு விதத்தில் செய்து சிறிய அளவில் விற்பனை செய்து வருகிறார்கள். அதாவது அவர்களுக்கு தெரிந்தவர்களுக்கு மட்டும் அதனை வழங்கி வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட வீட்டுச் சாப்பாடு நம்முடைய பகுதியில் எங்கு கிடைக்கும் என்பதே பெரிய சவாலாக இருந்து வருகிறது.
சாப்பாட்டைப் பொறுத்தவரை நாம் நாளை என்ன சமைக்கப் போகிறோம் என்று முதல் நாள் இரவே முடிவு செய்வதில்லை. அன்று நம் மனதில் என்ன தோன்றுகிறதோ அது தான் நம் சமையல் அறையில் தயாரிக் கப்படுகிறது. ஆனால் கிளவுட் கிச்சன் மூலம் உணவினை தயார் செய்து கொடுப்பவர்கள் 24 மணி நேரத்திற்கு முன்னரே ஆர்டர் செய்ய வேண்டும். காலை உணவு தேவை என்றால் முதல் நாள் இரவே சொல்ல வேண்டும்.
கரோனா காலத்தில் உணவகம் வைத்திருப்பவர்கள் கூட பின்பற்றிய முறைதான் கிளவுட் கிச்சன். அதாவது சமைக்கும் இடத்தி லிருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு செல்வதுதான். இந்த முறையை வீட்டுச் சமையலிலும் சாத்தியமாக்க முடியும் என்ப தற்கு எங்க ஷீரோ ஃபுட்ஸ் ஒரு உதாரணம். அதாவது வாடிக்கையாளர்கள் எந்த ஏரியா வில் இருந்தாலும் ஷீரோ ஹோம் ஃபுட்ஸ் மூலம் உணவை பெற்றுக் கொள்ளலாம்.’’
சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ் முறைப்படி சமைக்க தெரியும். ஆந்திராவில் இருப்பவர்களுக்கு ஆந்திரா சமையல். இப்படி அவரவர் முறைப்படியே சமையல் செய்தாலே போதும். எங்க நிறுவனத்தில் ஒரு ஆந்திரா பப்பு, கேரளா அவியல் ஆர்டர் செய்தால், அதே பாரம்பரிய சுவையுடன் சாப்பாடு கிடைக்கும் என்ற நம்பிக்கை வரவேண்டும். அதை எங்களின் ஷீரோ ஃபுட் தொழில்நுட்பம் மூலம் அவர்களுக்கு சொல் லித் தருகிறோம். அதாவது ஒரு ஆர்டர் வந்தால் 20லிருந்து 30 நிமிடங்களில் எப்படி சமைத்து, அதை பேக் செய்து கொடுக்க வேண்டும் என்று பயிற்சி அளிக்கிறோம். ஆர்டர் வந்தால் அதை எவ்வாறு வழங்க வேண்டும், எந்த உணவில் என்ன பொருட் கள் சேர்க்க வேண்டும், அதை எப்படி எளி தாக சமைக்க வேண்டும் என்பதையும் நாங்க சொல்லித் தருகிறோம் என்று மகிழ்வுடன் செல்கிறார் ஜெயசிறீ.