திருச்சியில் நகர மக்கள் குழு சார்பில் முதன் முதலாக தந்தை பெரியார் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலையை மேனாள் முதலமைச்சர் காமராசர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று
(17-09-1967)
“விடுதலை” நாளேடு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாள் இன்று (17-09-1996). மேலும் இணையத் தளத்தில் பதிவேற்றிய முதல் இதழ் என்ற சிறப்பையும் பெற்று வருகிறது.
சேலத்தில் பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப் பட்ட நாள் இன்று (17-09-1997)
தந்தை பெரியார் அவர்களின் உருவம் பொறித்த அஞ்சல் உறை வெளியிடப்பட்ட நாள் இன்று (17-09-2003).
சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றம் திறந்து வைக்கப்பட்ட நாள் இன்று
(17-09-1963). நடிகவேள் எம்.ஆர். ராதா தமது 72 ஆவது வயதில் திருச்சியில் மறைவுற்ற நாள் இன்று (17-09-1979).

lதமிழ்த்தென்றல் திரு.வி.க. மறைவுற்ற நாள் இன்று (17-09-1953).
