கழகக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, பெரியார் பட ஊர்வலம், சமூக நீதி பெரியார் நடை, குடும்ப விருந்துடன் பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் நடத்துவோம் தஞ்சை மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

இணையவழி கையெழுத்து இயக்கம்

தஞ்சை, செப். 6- தஞ்சாவூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 4.9.2026 அன்று மாலை 6 மணி அளவில் தஞ்சாவூர் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் நடைபெற்றது

தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் அ.அருணகிரி அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்.

மாநில கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை விளக்கி தஞ்சை மாவட்டத்தில் அவற்றை செயல்படுத்துவது குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் கடுமையான உழைப்பு – சுற்றுப்பயணம் குறித்தும் விளக்கமாக உரையாற்றினார்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குநர் துரை.ரமேஷ், தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், பூதலூர் ஒன்றிய  தலைவர் மா.வீரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் பா.விஜயகுமார், ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர் மாநல். பரமசிவம், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய தலைவர் இரா.துரைராசு, ஒரத்தநாடு நகரத் தலைவர் பேபி. ரெ.ரவிச்சந்திரன், திருவையாறு ஒன்றிய தலைவர் ச.கண்ணன், அம்மாபேட்டை ஒன்றிய தலைவர் கி.ஜவகர், நகரத் தலைவர் துரை.அண்ணாதுரை, ஒன்றிய துணை செயலாளர் சாலியமங்கலம் ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன், திருவையாறு நகர தலைவர் கவுதமன், தஞ்சை வடக்கு ஒன்றிய தலைவர் மாத்தூர் பா.சுதாகர், திருவையாறு கவுதமன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன், செயலாளர் வெ.துரை, கீழவாசல் பகுதி செயலாளர் பழக்கடை பெ.கணேசன், விடுதலை வாசகர் வட்ட செயலாளர் ஏ.வி.என். குணசேகரன், தஞ்சை மாநகர துணை செயலாளர் இரா.இளவரசன், பள்ளி அக்ரகார பகுதி செயலாளர் பேராசிரியர் ஜோதிபாசு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ச.முத்துச்செல்வன், ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் கோவி.ராமதாஸ் பூதலூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக செயலாளர் பேராசிரியர் துரைராசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக இணைச் செயலாளர் ஆ.லட்சுமணன், விடுதலை வாசகர் வட்ட துணைச்செயலாளர் விசுவநாதன், மாவட்ட மகளிர் அணி துணைச்செயலாளர் மலர்கொடி மாவட்ட மகளிர் அணித் தலைவர் அ. கலைச்செல்வி, மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச.அழகிரி, பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர் தே.பபொய்யாமொழி, மாவட்ட கலை இலக்கிய அணி தலைவர் வெ.நாராயணசாமி, பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், கழக இளைஞரணி மாநில செயலாளர் இரா.வெற்றிக்குமார், பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில துணைச் செயலாளர் பேராசிரியர் ந.எழிலரசன், தஞ்சை மாநகர செயலாளர் இரா.வீரக்குமார், தஞ்சை மாவட்ட துணை தலைவர் பா. நரேந்திரன், தஞ்சை மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.

இறுதியாக மாநகர இளைஞரணி துணைத் தலைவர் அ.பெரியார் செல்வன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செப்டம்பர் 3 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற கழக தலைமைச் செயற்குழு தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒப்பாகும் மிக்காரும் இல்லாத உலகத் தலைவர் தந்தை பெரியார் அரசியல், ஜாதி, மத பாலின, வேற்றுமைகளை கடந்து அனைவருக்கும் அனைத்தும் என்ற சம உரிமை சமூக நீதிக்காகப் பாடுபட்டு தன் வாழ்நாளிலேயே தனது போராட்டத்திற்கான வெற்றியை கண்டவர் தமிழினத்தின் பண்பாட்டுத் திருவிழாவாக அறிவுலக ஆசானின் 148 -ஆம் ஆண்டு பிறந்த நாளை ஆக்கபூர்வமான வகையில் புது உற்சாகத்தோடு கொண்டாடும் வகையில் கழகத் தோழர்களின் இல்லங்களில் கழக கொடி ஏற்றி புத்தாடை அணிவித்து தஞ்சை மாவட்டத்தில் உள்ள கிராமம், ஒன்றியம், பேரூர், நகரம், மாநகரம், பகுதிகளில் கழகக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி ஒலிபெருக்கி வைத்து கொள்கை விளக்க பாடல்களை ஒளிப்பரப்புவது, பெரியார் சிலை மற்றும் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, கோலாகலமாக கொண்டாடி மகிழ்வது, வாய்புள்ள இடங்களில் பெரியார் பட ஊர்வலம் மற்றும் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் செப்டம்பர் 12 -அன்று நடைபெறும் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நிகழ்ச்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் பெரியார் நடை சமூக நீதி பயணம். (Periyar Walk)  செப்டம்பர் 19 சனிக்கிழமை காலை 6:30 மணி அளவில் தஞ்சாவூரில் மிக எழுச்சியோடு நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியார் நடை நிகழ்வில் பெருவாரி யான இளைஞர்களை பங்கேற்க செய்ய வேண்டுமாய் கழக பொறுப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

தந்தை பெரியார் 148.-ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள், மகளிர், பங்கேற்புடன் பெரியார் கொள்கை குடும்பங்களின் ஒன்று கூடல் (குடும்ப விருந்து) தஞ்சாவூர் மாவட்ட அளவில் செப்டம்பர் -27 அன்று மிக சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமைக் கழகத்தால் ரூ-10 விலையில் வெளியிடப்பட்டுள்ள “பெரியார் கேட்கும் கேள்விகள்”  புத்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அக்டோபர் -3 அன்று தஞ்சை மாவட்டம் முழுவதும் கழக இளைஞரணி திராவிட மாணவர் கழகம் திராவிட மகளிர் பாசறை சார்பாக புத்தக பரப்புரை இயக்கத்தை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா பட ஊர்வலம் பொதுக்கூட்டத்தை அக்டோபர் -3 அன்று மாலை தஞ்சாவூர் மாநகரத்தில் (திருவையாறு, ஒரத்தநாடு,) நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தந்தை பெரியார் 148 -ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா செப்டம்பர் -19 தஞ்சாவூரில் தமிழர் தலைவர் கி.வீரமணி, அவர்கள் தலைமையில் சமூகநீதி பெரியார் நடை (PERIYAR WALK.)

ஒருங்கிணைப்புக் குழு:

செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாநகர தலைவர்,இரா.வெற்றிகுமார், மாநில இளைஞரணி துணைச் செயலாளர். இரா.வீரக்குமார் தஞ்சை மாநகர செயலாளர் தே.பொய்யாமொழி, பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர், இரா.செந்தூரபாண்டியன்,  திராவிட மாணவர் கழக. மாநிலச் செயலாளர், பேராசிரியர்        துரை.ரமேஷ். உடற்கல்வி இயக்குனர், நா.இராமகிருஷ்ணன், பெரியார் வீர விளையாட்டு மாநிலச் செயலாளர், பேராசிரியர் பா.இளங்கோவன், ஆ. பிரகாஷ், மாவட்ட இளைஞரணி தலைவர், க.அன்பழகன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர், ச.சிந்தனை அரசு, திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர், க.ஜோதிபாசு, பள்ளி அகராகர  பகுதி தலைவர், சாமி.கலைச்செல்வன், புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர், இள.இளவரசன், மாநகர துணை செயலாளர், நெல்லுபட்டு அ.இராமலிங்கம், (தெற்கு) ஒன்றிய துணைச் செயலாளர்.

தந்தை பெரியார் 148-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியார் கொள்கைக் குடும்பங்களின் ஒன்று கூடல் (குடும்ப விருந்து)

ஒருங்கிணைப்பு குழு:

சி.அமர்சிங், மாவட்டத் தலைவர், மு.அய்யனார், மாவட்டக் காப்பாளர், அ. அருணகிரி, மாவட்டச் செயலாளர், ச.சித்தார்த்தன், மாநில கலைத்துறை செயலாளர், கோபு.பழனிவேல், மாநில ப.க அமைப்பாளர், பேராசிரியர் ந.எழிலரசன், மாநில எழுத்தாளர் மன்ற துணைச் செயலாளர், தே.பொய்யாமொழி, பெரியார் சமூக காப்பு அணி இயக்குனர், பா.நரேந்திரன், மாவட்ட துணைத்தலைவர், அ.கலைச்செல்வி, மாவட்ட மகளிர் அணி தலைவர்,  ச.அஞ்சுகம், மாவட்ட மகளிர் பாசறை தலைவர், ச.அழகிரி, மாவட்ட ப.க. தலைவர், பாவலர் பொன்னரசு, மாவட்ட ப.க. செயலாளர், குழந்தை கவுதமன், மாவட்ட ப.க.அமைப்பாளர், ரெ. சுப்பிரமணியன் மாவட்டத் துணை செயலாளர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *