ஒன்றிய உயர்கல்வி நிறுவனங்களில் அதிகரித்த தமிழ்நாட்டு எஸ்சி, எஸ்டி மாணவர்கள்!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 24- பழங்குடியினர் நலத் துறையின் கீழ் 36 உண்டு உறைவிட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு பயிலும் மாணவர்கள் நாடு முழுவதும் உள்ள அய்அய்டி, எம்அய்டி, அய்அய்அய்டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் வகையில் நீட், ஜேஇஇ, கிளாட், அய்எம்யு போன்ற போட்டி தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கான பயிற்சிகளை பழங்குடியினர் நலத் துறை வழங்கி வருகிறது.

அதன்படி, இந்த ஆண்டு 357 மாணவர் கள் பல்வேறு மாநிலங்களில் படிக்கச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ‘குமிழி’ அரசு பயிற்சி மய்யத்தின் தலைமை ஆசிரியர் சுமதி கூறியதாவது: பல தடைகளையும் தாண்டி வெளிவருவது மாணவர்களுக்கு சவாலான ஒன்று.

அதை தாண்டி படிக்க அவர்களுக்கு ஊக்கமளித்து வழிநடத்திச் செல்கிறோம். அதன்படி, வாசுகி பவுண்டேசனுடன் இணைந்து மாணவர்களுக்கு பயிற்சிஅளித்து வருகிறோம். 42 போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளித்து, எங்களது மாணவர்கள் அய்அய்டி, எம்அய்டி, நிஃப்ட், என்அய்டி ஆகிய உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

இந்த ஆண்டு ஆதிதிராவிடர் மாணவர் கள் 80 பேர், பழங்குடியின மாணவர்கள் 277 பேர் போட்டித் தேர்வில் வென்று படிக்கச் சென்றுள்ளனர்.

முதல் முறையாக ராஜீவ் காந்தி நேஷனல் ஏவியேஷன் பல்கலைக்கழகத்தில் பழங்குடியின மாணவர் ஒருவர் படிக்கத் தேர்வாகி உள்ளார். தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் இருளர் சமூகத்தை சேர்ந்த மாணவர் சேர்க்கை பெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

கேரள அய்அய்அய்டியில் சேர்ந்துள்ள மாணவர் கமலேஷ் கூறியதாவது: எனது சொந்த ஊர் சேலம் மாவட்டம் கெங்கவல்லி கிராமம். பெற்றோர் இருவரும் விவசாய கூலித் தொழிலாளர்கள்.

நான் பள்ளியில் படிக்கும் போதே, உயர்கல்வி நிறுவனத்தில் சேர வேண்டும் என்று பழங்குடியின நலத்துறை ஆணையர் அண்ணாதுரை ஊக்கப்படுத்தினார்.

அதேபோல, சமூகநீதி துறைச் செயலர் சுப்பையன் வழிகாட்டுதல்படி, ‘குமிழி’ பயிற்சி மய்யம் மூலம் பயின்று ஜேஇஇ தேர்வில் 78 சதவீதம் பெற்று கேரளமாநிலம் கோட்டயத்தில் உள்ள அய்அய்அய்டி நிறுவனத்தில் பி.டெக் படித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து சமூகநீதி துறை அமைச்சர் வன்னிஅரசு கூறியபோது, “முதல்முறையாக ஏவியேஷன் துறையில் எங்கள் மாணவர்கள் தடம் பதித்ததில் மகிழ்ச்சி. இடஒதுக்கீட்டை தாண்டி மாணவர்கள் சேர்க்கை அதிகரித் துள்ளது. முதலமைச்சரின் ஆணைப்படி, இடைநிற்றல் மாணவர்கள் மீதும் கவனம் செலுத்தி நல்வழிப்படுத்தும் பணிகளில் அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது” என்றார்.

வெளி மாநில உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *