சென்னை அய்அய்டி-யில் மருத்துவக் கல்வி தொடங்க திட்டம் இயக்குநர் தகவல்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக.21 வரும் காலங்களில் சென்னை அய்அய்டி-யில் மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் (MBBS) மற்றும் எம்டி (MD) பட்டங்கள் வழங் குவது குறித்து அதன் இயக்குநர்  தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டில் சொந் தமாக மருத்துவக் கருவி களை வடிவமைக்க வேண் டுமென்றால், மருத்து வர்களும் பொறியாளர்களும் ஒரே கூரையின்கீழ் செயல் பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், பொறியாளர்களை மருத் துவர்களாக மாற்றுவதை விட, மருத்துவர்களுக்குப் பொறி யியலில் பயிற்சி அளிப்பதே எளிதான அணுகுமுறையாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டிலுமே மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்பதே அய்அய்டி-யின் நோக்கம் என்றும், அய்அய்டி கரக்பூர் ஏற்கெனவே சொந்தமாக மருத்துவமனை அமைத்து எம்டி படிப்பை வழங்கி வருவதுபோல, சென்னை அய்அய்டியும் மருத்துவமனையை ஏற் படுத்தி முறையான மருத் துவக் கல்வியை வழங்க திட்ட மிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *