நாகர்கோயில், ஆக. 18- திராவிடர் கழக மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மஞ்சுவின் இணையர் கழக அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலாளர் மறைவுற்ற எஸ்.குமாரதாஸ் அவர்களின் நினைவேந்தல் – படத்திறப்பு நிகழ்ச்சி மந்தாரம் புதூரில் உள்ள அவரது இல்லத்தில் கழக மாவட்ட தலைவர் மா. மு. சுப்பிரமணியம் தலை மையில் நடைபெற்றது.
கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார். கழக மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் படத்தினை திறந்து வைத்து இரங்கல் உரை ஆற்றினார்.
மாவட்டக் காப்பாளர் ம.தயாளன், துணை தலைவர் ச.நல்லபெருமாள், பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட மகளிர் அணி தலைவர் சு.இந்திரா மணி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மஞ்சு குமாரதாஸ், தொழிலாளர் அணி செயலாளர் க.யுவான்ஸ், கோட்டாறு பகுதி தலைவர் ச.ச.மணி மேகலை, கழக தோழர்கள் ஞா.பிரான்சிஸ் ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினர்.
அரும்பாக்கம் தாமோதரன் திமுக நிர்வாகி பொன்முடி, திராவிடர் கழக மாணவர் கழகப் பொறுப்பாளர் இனியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

