கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.8.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பாஜக – ஜென்-சி பிரச்சாரம்: உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இளைஞர்களைச் சந்தித்து “தேசியவாத” கருத்துகளை முன் வைக்கும் வகையில் பாஜக மிகப்பெரிய ஜென்-சி பிரச்சாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது. “ஹர் கர் திரங்கா” உள்ளிட்ட பிரச்சாரங்கள் மூலம் இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் சமூக ஊடகப் பயனாளர்களை பாஜகவுக்கு ஆதரவாக திரட்ட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

* ஜந்தர் மந்தர் நடவடிக்கைக்கு அமித்ஷா பதிலளிக்க வேண்டும், ராகுல்: ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டது குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலளிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் என்றும், போராட்ட உரிமையை ஒடுக்குவது ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும் குற்றச்சாட்டு..

* “வரலாறு மீண்டும் நிகழக்கூடாது” – காங்கிரஸ்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகள் மீண்டும் நடைபெறக்கூடாது; கடந்த கால நிகழ்வுகளிலிருந்து பாடம் கற்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

* எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடை நீக்கம், நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கம் போன்ற சம்பவங்கள் ஜனநாயகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர் விமர்சனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஜந்தர் மந்தர் போராட்டத்தில் “பாலியல் வன்கொடுமைகளும் கொலைகளும் நடக்கும்” எனக் கூறிய கேரளா ஆர்எஸ்எஸ் தலைவர் கைது!

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* எதிர்க்கட்சிகளின் முட்டுக்கட்டையைத் தீர்க்க முடியாமல் ஒன்றிய அரசு திணறுவதால், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

* தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கு ‘கிரீமிலேயர்’ என்ற கருத்தை அமல்படுத்துவதை மாயாவதி எதிர்த்ததுடன், ஆர்எஸ்எஸ்ஸையும் கடுமையாக விமர்சனம். பல நூற்றாண்டுகளாக பாகுபாடு மற்றும் சமூகப் புறக்கணிப்பை எதிர்கொண்ட தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு மிகவும் உணர்வுபூர்வமான பிரச்சினை என கருத்து.

தி இந்து:

* மாணவர் போராட்டங்களை தொடர்ந்து, 14ஆவது ஜார்க்கண்ட் பொது சேவை ஆணைய (JPSC) முதல்நிலைத் தேர்வு மற்றும் 2023, 2025ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பின்னடைவுப் பணியிட தேர்வுகளை ரத்து செய்ய மாநில அரசு ஒப்புக்கொண்டது. மாணவர் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஜார்க்கண்ட் அரசு தெரிவித்துள்ளது.

* சுதந்திர இந்தியாவின் முதல் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை லடாக் வழிநடத்தும். 2027 கணக்கெடுப்பில் ஜாதி விவரங்கள் திறந்தவெளியாக பதிவு செய்யப்பட்டு, மக்கள் தெரிவிக்கும் ஜாதி பெயரே கணக்கெடுப்பாளர்களால் பதிவு செய்யப்படும். இதே திறந்தவெளி முறையால் 2011 SECC-யில், 46 லட்சத்துக்கும் மேற்பட்ட வெவ்வேறு ஜாதிப் பெயர்கள் பதிவாகி குழப்பத்தை ஏற்படுத்தியது.

தி டெலிகிராப்:

* சுதந்திர தின அரசு நிகழ்ச்சிகளில் முழுமையான “வந்தே மாதரம்” பாடலைப் பாட வேண்டும் என்ற ஒன்றிய அரசின் அழைப்பை கேரள காங்கிரஸ் எதிர்த்துள்ளது. ஆகஸ்ட் 9 முதல் 17 வரை “ஹர் கர் திரங்கா” பிரச்சாரம் நடைபெறும் நிலையில், அரசு நிகழ்ச்சிகளில் வழக்கம் போல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* அயோத்தி ராமன் கோயில் நன்கொடை முறைகேடு மற்றும் காணாமல் போன பொருட்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் பக்தர்களின் நம்பிக்கையுடன் தொடர்புடையது என்றும், கோயில் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கார்கே பேச்சு.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *