கன்னியாகுமரி – தோவாளை ஒன்றிய திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

திராவிடர் கழகம், மற்றவை

கன்னியாகுமரி, மார்ச் 13- திராவிடர்கழக தோவாளை  ஒன்றிய கலந்துரையாடல் கூட்டம்  வெள்ளமடம் கிறிஸ்துநகரில் உள்ள மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தன் இல்லத்தில் மாவ‌ட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது.  மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு, மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா.இராஜேஸ், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்  பெரியார் தாஸ்  தொழிலாளரணி அமைப் பாளர் ச.ச. கருணாநிதி, திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோகுல், இரா.முகிலன்   மற்றும் பலரும் கலந்துகொண்டு உரையாற்றினர். இயக்க வளர்ச்சிப் பணிகளை நடத்துவது விடுதலை நாளிதழுக்கு அதிக  சந்தாக்கள் சேர்ப்பது என முடிவு செய்யப் பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *