புதுடில்லி,மார்ச்14- ஒரே பாலின திரும ணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் மனுக் களை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள உயர்நீதிமன்றங்களில், ஒரே பாலின திரும ணங்களை அங்கீகரிக்க கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுக்கள் நிலுவையில் இருந்தன. அந்த மனுக்களை தனது விசாரணைக்கு உச்சநீதி மன்றம் மாற்றிக்கொண்டது.
இந்த மனுக்கள் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ஒரே பாலின திரும ணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க எதிர்ப்புத் தெரிவித்து ஒன்றிய அரசு தெரிவித்ததாவது:
நாடாளுமன்றம் மூலம் முறைப்படி இயற் றப்பட்ட சட்டங்கள், முறைப்படி இயற்றப்படாத பல மதத்தினரின் தனிநபர் சட்டங்கள் என எந்தச் சட்டங்களும் ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்துகொள்வதை ஏற்கவோ, அங்கீகரிக்கவோ இல்லை.
ஒரே பாலினத்தவர்கள் விருப்பத்துடன் பாலுறவு கொள்வது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தீர்ப்பளித்ததால், நாட்டுச் சட்டங்களின் கீழ் ஒரே பாலின திரும ணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்பதை அடிப்படை உரிமையாகக் கோர முடியாது.
ஒரே பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளித்தால், அது தனிநபர் சட்டங் களின் சமநிலை, ஏற்கெனவே ஏற்கப்பட்டுள்ள சமூக விழுமியங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஜே.பி.பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று (13.3.2023) நடைபெற்றது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரும் விவகாரம் என்பது ஒருபுறம் அரசியல் சாசன உரிமைகளும், மறுபுறம் சிறப்பு திரு மணச் சட்டம் உள்ளிட்ட சிறப்புச் சட்டங்களும் ஒன்றின் மீது மற்றொன்று ஏற்படுத்தும் விளைவை உள்ளடக்கியுள்ளது.
இந்த விவகாரத்தை அரசமைப்புச் சட்டப் பிரிவு 145 (3)-இன் கீழ், 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்தால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். எனவே இந்த மனுக்கள் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக தாக்கல் செய்யப்பட வேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
இந்த மனுக்கள் மீதான அடுத்த விசாரணை ஏப்ரல் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
‘திருமணம்’ என்பது கொள்கை சார்ந்தது: அமைச்சர்
ஒரே பாலின திருமணம் தொடர்பான ஒன்றிய அரசின் நிலைப்பாடு குறித்து, டில்லி யில் ஒன்றிய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களிடம் நேற்று (13.3.2023) கூறியதாவது:
தனிநபரின் வாழ்க்கை, அவர்களின் அந் தரங்க நடவடிக்கைகளில் அரசு தலையிட வில்லை. இதில் எந்தக் குழப்பமும் வேண்டாம். அதே வேளையில், திருமணம் என்பது கொள்கை சார்ந்த விஷயம் என்று தெரிவித்தார்.