24 கோடி முஸ்லிம்களை கடலில் வீசுவீர்களா, சீனாவுக்கு அனுப்புவீர்களா? வெகுண்டெழுந்தார் ஃபரூக் அப்துல்லா

2 Min Read

சிறீநகர், மார்ச் 15- 24 கோடி முஸ்லிம்களை என்ன  செய்வார்கள்? கடலில் வீசுவார்களா  அல்லது சீனாவுக்கு அனுப்புவார்களா? என்று நரேந்திர மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு, தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். 

தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா தலைமையில் பாஜக அல்லாத கட்சிகளின் கூட்டம், ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்றது. பரூக் அப்துல்லா வீட்டில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் எம்.ஒய். தாரிகாமி, மக்கள் ஜனநாயக கட்சியின் அம்ரிக் சிங் ரீன், ஆம்  ஆத்மி உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பு களின்  பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். 

இந்தக் கூட்டத்தில், ஜம்மு – காஷ்மீருக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்துவது மற்றும், அதன் மாநில சிறப்புத் தகுதியை மீட்டெடுப்ப தற்காக டில்லியில் தேர்தல் ஆணையத்தை சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. 

கூட்டத்திற்குப் பின், பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:

“மத அடிப்படையில் நாட்டை பிளவுப் படுத்த வேண்டாம். 22 முதல் 24 கோடி முஸ்லிம்களை என்ன  செய்வார்கள்..? கட லில் வீசுவார்களா, அல்லது சீனாவுக்கு அனுப்புவார்களா..? சமூகங்களை ஒருவருக் கொருவர் எதிரெதிராக நிறுத்தக் கூடாது. 

பயம் மற்றும் வெறுப்பு அரசியல் புதிதல்ல. காந்திஜி ராமராஜ்யம் பற்றி பேசினார். ராம ராஜ்ஜியம் என்பதன் மூலம் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை அனுபவிக்கும் மற்றும் யாருக்கும் பாகுபாடு காட்டாத பொது நல அரசு என்று அவர் அர்த்தப்படுத்தினார். காந்தியாரின் கொள்கைகளை நாம் அனை வரும் பின்பற்ற வேண்டும்.  ஜம்மு – காஷ் மீரை முழு அளவிலான மாநிலத்திலிருந்து யூனியன் பிரதேசமாக மாற்றுவது தேசத்தின் சோகம். 

எனவே, ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில சிறப்புத் தகுதி கோருவது மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் காக்க பேரவைத் தேர்தலை முன்கூட்டியே நடத்த தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக தேர்தல் ஆணையத்தை சந்திக்க நாங்கள் டில்லிக்கு செல்வோம். தேசிய எதிர்க்கட்சி தலைவர் களையும் சந்திப்போம். 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் அதன்பிறகு, யார் பிரதமர் என்பதை முடிவு செய்ய வேண்டும்.” 

 இவ்வாறு பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *