சென்னை, மார்ச் 16 – இசுலாமியர்கள் மீதான வெறுப்புணர்வை எதிர்த்துப் போரிடுவதற்கான உலக நாளையொட்டி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், சிறுபான்மையினரின் உரிமை களைப் பாதுகாக்க உறுதி ஏற்போம் என்று குறிப்பிட் டுள்ளார். அதன் விவரம் வருமாறு: வரலாறு நெடுக நிறைந்திருக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன் முறைச் செயல்கள் என்பது மனித இனத்தின்மீது படிந்துள்ள அழியாக் களங்கம்! இசுலாமியர்கள் மீதான வெறுப் புணர்வை எதிர்த்துப் போராடுவதற்கான உலக நாளான இன்று, சிறுபான்மையினருக்கு எதிரான அமைப்புரீதியான ஒடுக்கு முறையை எதிர்த்துப்போராடவும், அரசமைப்புச் சட்ட விழுமியங்களின் வழியில் அவர்களின் உரிமைகளைப் பாது காக்கவும் உறுதியேற்போம்! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க உறுதி ஏற்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘ட்விட்டர்’ பதிவு!
Leave a Comment