செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கப் பயிற்சி! சென்னையில் 3 நாட்கள் நடக்கிறது

2 Min Read

சென்னை, ஜூலை 12– தமிழ்நாடு அரசு வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித் திருப்பதாவது;-

மூன்று நாள் “செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்” பயிற்சி.

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், “செயற்கை நுண்ணறி வைப் பயன்படுத்தி செயலி உருவாக்கம்” எனும் மூன்று நாள் முழுநேர பயிற்சி 15.07.2026 முதல் 17.07.2026 வரை (காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை), இந்த நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெறவுள்ளது.

பயிற்சி சுருக்கம்

பங்கேற்பாளர்கள் தங்கள் யோசனை களைச் செயலில் பயனடையும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூல வடிவச் செயலியாக (AI prototypes) மாற்றக் கற்றுக்கொள்வார்கள்.

முன்னணி பயன்படுத்தும் No-Code / Low-Code AI கருவிகள் பற்றிய பயிற்சி.

கீழ்கண்ட பிரபலமான தளங்களை கொண்டு நேரடி பயன்பாட்டு செயலிகள் உருவாக்கம்: செயல்முறை பயிற்சி

வழிகாட்டியுடன் படிப்படியாக கற்றல்

ஏஅய் (செயற்கை நுண்ணறிவு) அடிப் படையிலான வலைத்தளங்கள் மற்றும் செயலிகள் உருவாக்கம்

தனிப்பட்ட மற்றும் தொழில்துறை தேவைகளுக்கான தானியங்கி முறைகள்

கல்வி, சுகாதாரம், நிதி, சில்லறை வணிகம் போன்ற துறைகளில் பயன்பாட்டு மாதிரிகள் உருவாக்கம்

தயாரிப்பு சிந்தனை மற்றும் ஸ்டார்ட்அப் மனப்பாங்கு உலகளாவிய சிக்கல்களுக்கு தீர்வு காணும் ஏஅய் எம்விபி உருவாக்கம்

Problem-Solution Fit, JTBD போன்ற ஸ்டார்ட்அப் கோட்பாடுகள்

உங்கள் செயலியின் மாதிரி வடிவத்தை முதன்மை வழிகாட்டிகள், முதலீட் டாளர்கள் முன் சமர்ப்பிக்கும் திறன்

தொழில் வளர்ச்சி வழிகள்

மாணவர்கள், நிறுவனர்கள், ஆரம்ப நிலை தொழிலாளர்கள் ஆகியோருக்கு பொருத்தமானது

உங்கள் பேராசிரியர் சான்றிதழ் / போட்டிப் பதிவுகளில் காண்பிக்க ஏஅய் மாதிரிகள்

Product Managers, Solopreneurs பயன்படுத்தும் கருவிகள் கற்றல்

வேலை வாய்ப்பு, ஹேக்கத்தான் போட்டிகள் மற்றும் லிங்க்ட்இன் தளங் களில் செயல்படுத்தும் வாய்ப்புகள்

தொழில் முனைவு பாதைகள்

ஏஅய் (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான வணிகம் அல்லது ஃப்ரீலான்சிங் தொடங்க அடித்தளம் அமைத்தல். குறைந்த செலவில், விரைவில் உங்கள் ஸ்டார்ட்அப் யோசனைகளை பரிசோதித்தல்.

பதிவு மற்றும் தொடர்பு விவரங்கள்

இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓரளவு கணினி அனுபவம் இருத்தல் வேண்டும். தங்கும் விடுதி வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும்.

பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு www.editn.in அல்லது 8668100181 / 9360221280 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்பு கொள்ளலாம்.

முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.அய்.அய். அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை 600032.

அரசுச் சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *