ஒருங்கிணைந்த குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு விளையாட்டு வீரர்கள் ஆவணங்களைப் பதிவேற்ற கடைசி தேதி ஜூலை 20 டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

1 Min Read

சென்னை, ஜூலை 12– ஒருங்கிணைந்த குரூப்-2, குரூப்-2ஏ எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்ற விளையாட்டு வீரர்கள் உரிய ஆவணங்களை ஜூலை 20ஆம் தேதிக்குள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ப.சிறீவெங்கடபிரியா 10.7.2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ எழுத்துத் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்று தங்கள் இணையதள விண்ணப்பத்தில் சிறந்த விளையாட்டு வீரர் என்று உரிமை கோரிய விண்ணப்பதாரர்கள் தாங்கள் பெற்ற விளையாட்டு சாதனை ஆவணங்களை இணையவழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதுகுறித்த தகவல் அவர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும், தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள குறிப்பாணை மூலமாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்கள் அசல் விளையாட்டு சான்றிதழ்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் அனைத்தையும் படிவம் ஒன்று முதல் 5 வரையில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்வாணையத்தின் இணையதளத்தில் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக ஜூலை 11 (இன்று) முதல் 20ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால், அந்த விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

திரிபுரா வெள்ளம்

11 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்!

அகர்தலா, ஜூலை 12- திரிபுராவில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் 4,000 வீடுகள் சேதமடைந்துள்ளன; 11 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நல்வாய்ப்பாக இதுவரை உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. பாதிக்கப்பட்ட உனகோடி மாவட்டத்தில் மட்டும் 6,068 பேர் 35 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு

தலாய் மற்றும் கோவாய் பகுதிகளில் மேலும் 4,909 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *