அரசுப் பள்ளிகள் திறக்கப்பட்டு ஒரு மாதம் ஆகியும் மாணவர்களுக்குப் பாடப் புத்தகம் வழங்கப்படவில்லை கல்வியாளர்கள் கடும் கண்டனம்

சென்னை, ஜூலை 9- ஒரு மாதம் ஆகியும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை, என கல்வியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் மறுதிறப்பு செய்யப்பட்டு ஒரு மாத காலம் கடந்த நிலையிலும், மாணவர்களுக்கு இன்னும் பாடப் புத்தகங்கள் முழுமையாக வழங்கப் படவில்லை என்ற அதிருப்தி எழுந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவ, மாணவிகளின் கல்வித் திறன் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாகக் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ள நிலையில், கல்வியாளர் நெடுஞ்செழியன் இந்த தாமதத்தை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: குழந் தைகள் மிகுந்த ஆர்வத்துடனும், புதிய எதிர்பார்ப்புகளுடனும் பள்ளிக்கு வரும்போது அவர்களிடம் பாடப் புத்தகங்கள் இல்லை என்று சொல்வது அவர்களின் கற்றல் ஆர்வத்தையும், திறனையும் அடியோடு பாதிக்கும்.

கையில் பாடப் புத்தகங்கள் இல்லாமல் ஆசிரியர்கள் எதைக் கொண்டு, எப்படி மாணவர்களுக்குப் பாடம் நடத்த முடியும்? ஒரு வகுப் பறைக்குக் கல்வி கற்பிக்க பாடப் புத்தகம் என்பது மிக மிக இன்றியமையாதது. பள்ளிகளை திறப்பதற்கான தேதிகளை தீர்மானிக்கும் அரசு மற்றும் பள்ளிக்கல்வித் துறை, அதற்கு முன்பாக மாணவர்களுக்கான புத்த கங்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் தயார் நிலையில் உள்ளனவா என்பதை ஒரு ‘செக்லிஸ்ட்’ மூலம் சரிபார்க்க தவறிவிடுகிறது என்றார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *