வெம்பாக்கத்தில் திராவிடர் எழுச்சி நாள் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

செய்யார், ஜூன் 14- திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கத் தில் கழகத்தின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம் 8.6.2026 அன்று மாலை 6.30 மணிக்கு நடை பெற்றது. செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வி.வெங் கட்ராமன் தலைமை வகித்து கூட்டத்தின் நோக் கத்தை விளக்கிக் கூறினார்.

செய்யாறு மாவட்ட கழகத் தலைவர் அ.இளங் கோவன், செய்யாறு நகரத் தலைவர் தி.காமராசன், மாவட்ட துணை தலைவர் அ.நாகாசன், மாவட்டச் செயலாளர் பொன்.சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

தி.மு.க. சட்டப்பேவை முன்னாள் உறுப்பினர் ஏ.ஜோதி, வெம்பாக்கம் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜே.சி.கே. சீனுவாசன், வெம்பாக்கம் ஒன்றிய திமுக பொரு ளாளர் அ.சேகர், ஆரணி மேல்சீசமங்களம் சுதா வாசுதேவன், தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் காஞ்சிபுரம் நாத்திகம் நாகராசன், காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் அ.வெ.முரளி ஆகியோர் பேசி யதையடுத்து திராவிடர் கழக பேச்சாளர் தி.என்னாரெசு பிராட்லா தமதுரையில் பெரியார் குருகுல மாணவர் கலைஞர் பின்தங்கிய சமூகத்தில் பிறந்து, சுயமரியாதை கருத்துகளால் ஈர்க்கப் பட்டு, திராவிட இயக் கத்து எழுத்தாளராக, மேடைப் பேச்சாளராக உயர்ந்து அய்ந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவி வகித்து, சமூகநீதி, சமத்துவம், அறிஞர் அண்ணா, தந்தை பெரியாரின் தத்துவங்களை ஏற்று, தமிழ்நாட்டை நவீனமயமாக்கி, இந்தியா விலேயே கணிப்பொறி கல்வியை கொண்டு வந்து, டைடல் பார்க் என்ற பெயரில் நவீன தமிழ்நாட்டை உரு வாக்கி ஏராளமான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கியவர் கலைஞர் என அடுக்கடுக்கான செய்திகளை எடுத்துக் கூறினார்.

நிகழ்ச்சியில் குத்த னூர் முனுசாமி, செய்யாறு கஜபதி, இளை ஞரணி செ.அரவிந்த், மாங்காய் ரங்கநாதன், அழிவிடைதாங்கி பி.பழனி, ஆரணி இரா.வாசுதேவன், வடமணப்பாக்கம் மு.வெங்கடேசன், தங்கம் பெருமாள், வெம்பாக்கம் பிரகாஷ், மாணவர் கழக வெ.இளஞ்செழியன், பெரியார் பிஞ்சு அ.மகி ழன், ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் சிறுநல்லூர் டி.சின்னதுரை நன்றி கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *