சென்னை,மார்ச்22- தமிழ்நாடு சட்ட மன்றத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் நேற்று (21.3.2023) தாக்கல் செய்யப்பட்ட வேளாண் துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை யில், 1.27 கோடி டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய திட்டம்குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021_20-22ஆம் ஆண்டில் பல தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தியதால், தமிழ்நாட்டில் மொத்த சாகுபடி பரப்பு 1.93 லட்சம் ஹெக்டேர் அதிகரித்து, மொத்தமாக 63.48 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. மண்வளம் காக்கும் பணிகளால் 6 ஆண்டுகளுக்கு பிறகு, 2021_20-22ஆம் ஆண்டில் 1.20 கோடி டன் உணவு தானிய உற்பத்தி செய்து சாதனை படைக்கப்பட்டது. இது 2020-21ஆம் ஆண்டைவிட 11.73 லட்சம் டன் அதிகம்.
2022_20-23ஆம் ஆண்டில் டெல்டா மாவட்டங்களில் 5.36 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடந்து,47 ஆண்டு களில் இல்லாத சாதனை படைக்கப் பட்டுள்ளது. இதுதவிர கடந்த 2 ஆண்டுகளில் 1.50 லட்சம் புதிய விவ சாய மின் இணைப்புகள் வழங்கப்பட் டுள்ளன. இயற்கை இடர்ப்பாடுகளால் ஏற்படும் வருவாய் பாதிப்பை தடுக்க, தமிழ்நாடு அரசால் ரூ.1,695 கோடி காப்பீடு கட்டண மானியமாக வழங்கப் பட்டு, 6.71 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.783 கோடி இழப்பீடு வழங்கப்பட் டுள்ளது.
கடந்த ஜனவரி, பிப்ரவரியில் பருவம் தவறி பெய்த கனமழையால் பாதிக்கப் பட்ட 1.82 லட்சம் விவசாயிகளுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடுபொருள் மானியமாக ரூ.163.60 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வரும் ஆண்டில் 1.27 கோடி டன் அளவுக்கு உணவு தானியங் கள் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட் டுள்ளது என்று நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வேளாண்மைத் தொழிலை பாவகர மானது ஒதுக்கி வைக்கின்ற இந்துத் துவா ஆர்.எஸ்.எஸ். வழியில் ஒன்றிய பாஜக அரசு ஆட்சியில்தான் விவசாயிகள் தொடர போராட்டங்களை நடத்தினர்.ந இந்த நாட்டின் முதன்மை யான தொழில் விவசாயம் மற்றும் அதனைத் சார்ந்த கால்நடை வளர்ப்புத் தொழில் ஆகும்.
ஆனால் இந்த இரண்டிலுமே இந்துத்துவா நோக்கில் ஆட்சிபுரிகின்ற பாஜக அக்கறையின்றி இருப்பதுடன், அந்த தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு பெரும் இன்னலை ஏற்படுத்துகின்ற மத அடிப்படைவாதங்களின் வேரூக்கு நீரற்றி வளர்த்து வருகிறது.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசில்தான் வேளாண்துறைக்கு என தனி முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தனியே நிதிநிலை அறிக்கை மூன்றாவது ஆண்டாக வேளாண்முறைக்கான தனி நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் நேற்று (21.3.2023) தாக்கல் செய்யப்பட் டுள்ளது குறிப்பிடத்தக்கது.