தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி அவர்கள் தேசிய கருத்தரங்கம் ஒன்றில் பேசும்போது, ”தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை அரசு பின்பற்றுகிறது. மற்றபடி ஹிந்தி படிப்பதற்குத் தடையில்லை” என்று பேசி இருக்கிறார்.
ஆமாம், இதில் என்ன தவறு? ஹிந்தி என்ன பல மொழிகளையும் கற்கத் தடையில்லைதான். தமிழ்நாட்டில் ஹிந்தி பிரச்சார சபா இல்லையா?
இந்த நிலையில், அமைச்சர் க.பொன்முடி தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களில் ஹிந்தி கற்கலாம் என்று கூறியதாக பொருள்படும்படி செய்தி வெளியிடுவது பார்ப்பனக் குறும்புதானே!
இவர்கள் திருந்தவே மாட்டார்கள் என்க!