கேள்வி: மு.க.ஸ்டாலினுக்கு திராவிட நாயகன் பட்டம் பொருந்துமா?
பதில்: ஸ்டாலினுக்கு – திராவிட நாயகன் பட்டம் பொருந்துமோ இல்லையோ, திராவிட மாடல் நாயகன் பட்டம் நிச்சயம் பொருந்தும்.
– ‘துக்ளக்’, 29.3.2023, பக்கம் 28
அப்படியா? இதுவரை திராவிடம் என்பது எல்லாம் ஒன்றும் கிடையாது என்று உளறி வந்தவர்கள் இப்பொழுது, அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டார்கள் அல்லவா – அதுவரை திராவிடத்துக்கு வெற்றிதான்.
பதில் சொல்லுவதிலும் ஒரு ‘இக்கு’, ‘சன்னப்பொடி’ அவாளுக்கே உரித்தான முறையில்… ஸ்டாலினுக்கு திராவிட நாயகன் பட்டம் பொருந்தாதாம். மாறாக, திராவிட மாடல் நாயகன் பட்டம் நிச்சயம் பொருந்துமாம்! சபாஷ்!! முதலமைச்சர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டார்!
‘திராவிட மாடல்’ வெற்றி மேலும் மேலும் ஓங்கட்டும்!
ஜெயலலிதாவின்
”கூடுதல் துணிவு!”
கேள்வி: ஜெயலலிதா, மம்தா இருவரையும் ஒப்பிடுங்கள்?
பதில்: இருவரும் அசாத்திய துணிவு படைத்தவர்கள். இது ஒற்றுமை. மம்தா தன் உடன்பிறப்புகளை நெருக்கமாக வைத்திருக்கிறார். ஜெயலலிதா தன் உடன் பிறவாதவர்களை நெருக்கமாக வைத்திருந்தார். இது வேற்றுமை!
– ‘துக்ளக்’, 29.3.2023, பக்கம் 28
அவாளின் ஜெகத்குருவான ஜெயேந்திர சரஸ்வதியைக் கொலைக் குற்றத்தில் கைது செய்து சிறையில் தள்ளினாரே ஜெயலலிதா – அது கூடுதல் துணிவு என்பதை விட்டுவிட்டாரே, குருமூர்த்தி!