சேலம், மார்ச் 26- சேலம் மாவட்டத்திலுள்ள பல்வேறு பள்ளிகளில் பெரியார் 1000 வினா-விடை போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சான்றிதழும், பதக்கமும் மற்றும் மாவட்ட அளவிலான பரிசுகளும் வழங் கும் விழாவில் கழகப்பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
13-1-2023 தொடங்கி 27-01-2023 வரை நடைபெற்ற விழாக்களின் விவரம் வருமாறு,
சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் நகர் காலனி அரசு உயர்நிலைப் பள்ளி. சேலம் உடையாப்பட்டி. அரசு மேல்நிலைப்பள்ளி, சேலம் அம்மாப்பேட்டை நகரவை மகளிர் மேல்நிலைப் பள்ளி, சேலம் அம்மாப்பேட்டை நகரவை ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, சேலம் அயோத்தியாப்பட்டணம் அரசு மேல்நிலைப்பள்ளி, சேலம் கன்னங்குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளி, சேலம் கொண்டப்பநாயக்கன் பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, சமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, சேலம் அம்மாப்பேட்டை காமராஜ் நகர் ஜோதி மெட்ரிகு லேசன் பள்ளி ஆக மொத்தம் 9 பள்ளிகளில் நாளும் ஒரு பள்ளியாக , சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் வீரமணி ராசு, ப.க. தோழர்கள் வாசந்தி வீரமணி, பூங்கோதை இமயவரம்பன், சு.இமயவரம்பன், செல்வ குமார், வழக்குரைஞர், திரைப்பட இயக்குநர் குமாரதாசன், கவுரி பிரிண்டர்சு சண்முகம், சேலம் அம்மாப்பேட்டை மண்டல தலைவர் தனசேகர், ராசா, கொ.நா. பட்டி வார்டு உறுப்பினர், அருள்குமார் சமுத்திரம் மற்றும் அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் ஆசிரிய, ஆசிரி யைகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மாணவ – மாணவியரிடையே பெரியார் பற்றியும் அவரது தொண்டு பற்றியும் எடுத்துக்கூறி இந்த தேர்வு நடத்துவதன் நோக்கம் எப்படிப்பட்டது என்பதையும் இந்த தேர்வில் கலந்துகொண்டவர்கள் பெற்ற பயன் என்ன என்பதையும் எடுத்துக்கூறினார்கள்.
மாவட்ட அளவிலான பரிசுகளை வெற்றி பெற்ற சமுத்திரம் பள்ளி மாணவர்களுக்கு வீரமணி ராசுவும், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை கலந்துகொண்ட சிறப்பு அழைப்பாளர்களும், தந்தை பெரியார் அவர்களின் படங்களை பள்ளிக்கு ப.க. தோழர்களும் வழங்கினர்.