ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்-ஆளுநருக்குக் கண்டனம்!
விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி பொதுக்குழு தீர்மானங்கள்
சென்னை, மார்ச் 26- தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி மற்றும் தமிழ்நாடுக் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் தலை வர் பொன்குமார் தலைமையில் 19 மற்றும் 20.3.2023 ஆகிய தேதிகளில் ஊட்டியில் நடை பெற்றது. தமிழ்நாடு முழுவதிலிருந்தும் சுமார் 1000 பிரதிநிதிகள் பொதுக் குழுவில் கலந்து கொண்டனர்.
பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகள் தேர்தல் நடை பெற்றது. தலைவர் பொன் குமார் மீண்டும் தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப் பட்டார். பொதுச்செயலாளர் களாக என். சுந்தரராஜ், வி.சுப் புராயலு, பொறியாளர் எஸ்.ஜெகதீசன், ஜெகமுருகன் ஆகி யோரும், பொருளாளராக திருவாரூர் ஆர். சேகரும் தேர்வு செய்யப்பட்டனர். மாநில இளை ஞரணித் தலைவராக வினோத் பொன்குமார் தேர்ந்தெடுக்கப் பட்டார். 9 பெண் நிர்வாகி களும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பன் னாட்டு கட்டுமான மற்றும் மரத் தொழிலாளர் அமைப் பின் தெற்காசிய திட்ட அலு வலர் ராஜு சர்மா கலந்து கொண்டு வாழ்த்துரை வழங் கினார். இந்த பொதுக்குழுவில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.
ஆட்சி மாற்றத்திற்கு வாக்களிப்பு – நன்றி!
தமிழ்நாட்டை பத்தாண்டு காலம் பாழ்ப்படுத்திய அ.தி.மு.க. ஆட்சியினை முடிவு கட்டிடும் வகையில், 2021-ஆம் ஆண்டு சட்டப் பேரவை பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அணிக்கு மகத்தான வெற்றியை அளித்து, தமிழ்நாடு முதலமைச்சராக தளபதி மு.க.ஸ்டாலின் அவர் களை அமர்த்திய தமிழ்நாடு வாக்காளப் பெருமக்களுக்கு இப்பொதுக்குழு நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித் துக் கொள்கிறது.
வாரியத் தலைவராக பொன்குமார் நியமனம்
தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, திராவிட முன்னேற் றக் கழக அரசு அமைந்து, அதன் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் முதல மைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன் முதலில் கட்டுமா னத் தொழிலாளர் நல வாரியத் தின் தலைவராக தலைவர் பொன்குமார் அவர்களை நியமனம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியினை இப்பொதுக் குழு தெரிவித்துக் கொள்கிறது.
கட்டுமானத் தொழிலாளர்கள் வீடுகட்ட 4 லட்சம் உதவி – பாராட்டு!
வீடு கட்டும் தொழிலாளி வீதியிலே உறங்குகிறான் என்ற நிலையைப் போக்கிட கட்டு மானத் தொழிலா ளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற, சொந்தமாக வீடு இல்லாத தொழிலாளர் களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு ரூபாய் 4 லட்சம் வழங்கக் கூடிய அரிய திட்டத்தை அறிவித்துள்ள தமிழ் நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசனுக்கும், வாரியத் தலைவர் பொன் குமாருக்கும் இப்பொதுக்குழு நன்றியையும், பாராட்டுதலை யும் தெரிவித்துக் கொள் கிறது.
நலவாரியங்கள் செயல்பாடு-பாராட்டு!
பத்தாண்டு காலம் ஆட்சி யில் இருந்த அ.தி.மு.க. அரசு, முடக்கி வைத்திருந்த அமைப்பு சாராத் தொழிலாளர் நல வாரி யங்கள் முழு வீச்சில் செயல் படுவதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது. விபத்து நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இயற்கை இறப்பு நிதி ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருமண உதவி ரூ.20 ஆயிரமாக வும், பேறுகால உதவி ரூ.18ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது, பிள்ளைகளுக்கான கல்வி உதவித்தொகை அனைத் தும் இரட்டிப்பாக்கப்பட்டுள் ளது. மேலும் ஆறாம் வகுப்பில் இருந்தே மாணாக்கர்களுக்கு உதவித் தொகை வழங்க உத்தர விடப்பட்டு நடைமுறைப்படுத் தப்பட்டு வருகிறது. இப்படி இந்த வாரியங்கள் முழு வீச்சில் செயல்படுவதற்கு காரணமான தமிழ்நாடு அரசு, தொழிலாளர் துறை அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் பொன்குமார் ஆகியோருக்கு இப்பொதுக் குழு நன்றியையும் பாராட்டுத லையும் தெரிவித்துக் கொள் கிறது.
ஆன்லைன் சூது தடுப்பு சட்டம்- ஆளுநருக்குக் கண்டனம்!
ஆன்லைன் சூதாட்டத் தின் மூலம் பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொள்வது தொடர் கதையாக நீள்கிறது. குறிப்பாக மாணவர்கள், தொழிலாளர்கள் போன்ற வர்கள் எல்லாம் பெருமளவு பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அவலம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இதைத் தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஆதரவோடு தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டத்திற்கு இன்று வரை ஆளுநர் ஒப்புதல் அளிக்க வில்லை. மாறாக ஆன்லைன் சூதாட்ட முதலாளிகளை தன் மாளிகையில் அழைத்து கலந்து ரையாடுவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதற்கு சமமா கும். இப்ப டிப்பட்ட மனிதாபி மான மற்ற செயலில் ஈடுபட்டு வரும் தமிழ்நாடு ஆளுநரை பொதுக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு அவரை உட னடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டுமென ஒன் றிய அரசை குறிப்பாக பிரதமர் மோடியை இப்பொதுக் குழு கேட்டுக்கொள்கிறது.
நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திடுக!
ஆன்லைன் சூதாட்டத்தை போன்று நீட் தேர்வும் தமிழ் நாட்டு மாணவர்களை தற் கொலைக்குத் தூண்டி வரு கிறது. பாடத்திட்டத்தில் ஒரு மொழியில் படித்த மாணவர் களை வேறு பாடத்திட்டத் திற்கான கேள்விகளுக்கு வேறு மொழிகளில் பதில் எழுத தேர்வு வைப்பது நியாயமற்ற தாகும். இதனால் பல மாண வர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாத அவலம் நீடிக் கிறது. இதனால் ஏழை எளிய அடித்தட்டு மாணவர்களின் மருத்துவக்கனவு சிதைக்கப்படு கிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு நீட் தேர்வுக்கு விலக்குக் கோரி சட்டப்பேரவையில் இயற்றப் பட்ட தீர்மானம் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல இழுத் தடிக்கப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த செயலை இப்பொதுக்குழு வன்மையாக கண்டிப்பதோடு உட னடியாக நீட் தேர்வுக்கு விலக்களிக்கக் கூடிய சட்ட மசோதாவிற்கு அங்கீகாரம் அளித்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண் டும் என ஒன்றிய அரசை இப் பொதுக்குழு கேட்டுக்கொள் கிறது.
கட்டுமானப் பொருட்களின் விலை நிர்ணயக்குழு!
கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் மணல், சிமெண்ட், செங்கல், ஜல்லி, கம்பி போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை எந்த வித முகாந்திரமும் இன்றி அவ்வப்பொழுது உயர்த்தப் படுகிறது. இந்த நியாயமற்ற விலையேற்றத்தால் கட்டு மானங்கள் தேக்க நிலையை அடைகின்றன. இதனால் கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் சார்ந்த சங்கிலித் தொடர் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகிறது. பொதுமக்களும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
எனவே பெரும் கட்டுமானப் பொருட்களின் விலையை நிர் ணயம் செய்திட, அரசு மற்றும் உற்பத்தியாளர்கள், உபயோ கிப்பாளர்கள் உள்பட கட்டு மானம் சார்ந்த அனைத்து பங்குதாரர்களும் இடம் பெறும் வகையில் நிரந்தரமாக செயல்படும் விலை நிர்ணயக் குழு அமைத்திட வேண்டும் என இந்தப் பொதுக் குழு கேட்டுக் கொள்கிறது.
தொழிலாக அறிவித்திட வேண்டும்!
கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் என்பது ஓரு நாட்டின் அடிப்படை கட்ட மைப்புப் பணிகளை மேற் கொள்ளக் கூடியதாகும். சாலைகள், மேம்பாலங்கள், துறைமுகம், விமான நிலையம், ரயில்வே நிலையம் மற்றும் பாதைகள் போன்றவற்றை அமைத்தல், குடியிருப்பு, அலு வலகக் கட்டுமானங்கள் போன் றவற்றை உரு வாக்கக்கூடிய இந்தத் துறை நாட்டின் பொரு ளாதார வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. விவசாயம் பொய்த்து வருகிற நிலையில் விவசாயத்திற்கு அடுத்தபடி யாக பெருவாரியான மக்க ளுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக்கூடிய தொழிலாகவும் இது உள்ளது. எனவே இதனை ஒரு தொழிலாக அறிவித்தி டவும், இத்துறையின் முக்கியத் துவத்தைக் கருதி, இந்தக் கட்டுமானத்துறைக்கு தனி அமைச்சகத்தை ஒன்றியத்தி லும். மாநிலத்திலும் ஏற்படுத் திட வேண்டும் என இந்த பொதுக்குழு கேட்டுக் கொள் கிறது. மேற்கண்டவாறு தீர்மானங்கள் அக்கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டன.