சென்னை, மே 20- தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 3-ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந் தைகளுக்கான புதிய பாடத்திட்டத்தை ஆசிரி யர்கள் நடத்துவதற்கான பயிற்சி முகாம், சென்னை நுங்கம்பாக்கம் டிபிஅய் வளாகத்தில் உள்ள மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கியது.
இப்பயிற்சி முகாமினை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயிற்சியில் பங்கேற்ற ஆசிரியர்களுக்கு வழிகாட்டு கையேடுகளை வழங்கினார். அதன்பின்னர் செய்தியா ளர்களிடம் அமைச்சர் ராஜ்மோகன் அளித்த பேட்டி பின்வருமாறு:
கோடை விடுமுறைக் குப் பிறகு பள்ளிகள் வழக்கம் போல் ஜூன் மாதத்தில் திறக்கப்பட உள்ளன. இருப்பினும், 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான குழந்தை களுக்கு பள்ளிகள் சற்று தாமதமாகவே திறக்கப் படும்.
தமிழ்நாடு பட்ஜெட் டில் பெண்ணுரிமை, மண்ணுரிமை என்பதில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அனைத் துப் பள்ளிகளிலும் தேவையான அடிப்படை வசதிகள் முழுமையாகச் செய்து கொடுக்கப்படும்.
கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தமிழ்நாட் டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை நிறுத்தி வைத்துள்ளது. ‘பிஎம்ஸ்ரீ’ திட்டத்தில் தமிழ்நாடு கையொப்பமிட வேண்டும் என்று ஒன்றிய அரசு வலி யுறுத்தி வருகிறது.
இந்த நிதி மாணவர்க ளுக்கானது; அதை ஒன்றிய அரசு நிறுத்தி வைப்பது எந்த வகையிலும் நியாயமில்லாத ஒன்று.
இருமொழிக்
கொள் கையில் சமரசம் இல்லை
“தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை என்பது எங்களது கட்சியின் பிரகடனப் படுத்தப்பட்ட கொள்கை ஆகும். அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. சிங்கப்பூரில் கூட உலகத் தொடர்புகாக ஆங்கிலம் தான் நடைமுறைப்படுத் தப்பட்டது. எனவே, எங்களது மொழிக் கொள் கையில் எந்தச் சமரசமும் கிடையாது. என்று அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்
