வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல்: தி.மு.க. கடும் கண்டனம்!

சென்னை, மே 20- திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த கும்பல் ஒன்று அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளது. பத்திரிகைச் சுதந்திரத்தை நசுக்கும் இதுபோன்ற அச்சுறுத்தல்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை திமுக சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். ஊடகங்களை ஜனநாயகத்தின் நான்காவது தூணாக மதிக்க வேண்டும் என்பதுடன், செய்தியாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட விடாமல், அச்சுறுத்தி அவர்களின் எழுத்துரிமை மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்படுவதை திமுக என்றைக்கும் ஏற்றதில்லை.

செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தும் போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும், அத்தகைய வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் மீது புதிய அரசு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுத்து அதன் மூலம் தமிழ்நாட்டில் பத்திரிகைச் சுதந்திரத்தை பேணிகாத்திடுவது அரசின் கடமை என்பதை உணர்ந்து, முத்துப்பேட்டையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஹாஜா முகைதீன் வீட்டிற்குள் புகுந்த மர்ம கும்பல்மீது புதியதாக பொறுப்பேற்றுள்ள மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *