சென்னை, மே 20 தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் த.வெ.க. பொறுப் பேற்றுள்ள சூழலில், மாநிலத்தின் தொழில்துறை முதலீடுகள் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புகள் தொடர்ந்து அண்டை மாநிலமான ஆந்திராவிற்கு பறிபோய் வருவதாக அரசியல் மற்றும் தொழில்துறை வட்டாரங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆந்திராவுக்குச் சென்ற
முக்கியத் திட்டங்கள்
முக்கியத் திட்டங்கள்
கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ‘முதலீட்டாளர்களின் நம்பிக்கை மாநிலம்’ என்ற பெருமையுடன், மின்சார வாகனங்கள் மற்றும் மின்னணு உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்ந்தது. ஆனால், தற்போதைய தவெக ஆட்சியில் புதிய முதலீட்டாளர்கள் மத்தியில் ஒருவித தயக்கமும் காத்திருப்பு மனநிலையும் உருவாகியுள்ளதாகப் பேச்சுக்கள் எழுகின்றன.
போர் விமான உற்பத்தி திட்டம்
ஓசூரில் அமைப்பதற்காக அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த நிலையில், ரூ.1,500 கோடி மதிப்பிலான போர் விமான உற்பத்தி திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென ஆந்திராவிற்கு மாற்றப்பட்டது. இதனால் தமிழ்நாடு இளைஞர்களுக்கு கிடைக்கவிருந்த 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் பறிபோயின.
ராயல் என்பீல்டு புதிய ஆலை
இதனைத் தொடர்ந்து, இருசக்கர வாகன உற்பத்தியில் உலகப் புகழ்பெற்ற ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ரூ.2,500 கோடி மதிப்பிலான புதிய ‘கிரீன்பீல்டு’ உற்பத்தி ஆலையை ஆந்திராவின் திருப்பதி அருகிலுள்ள தாடா பகுதியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
ஏற்ெகனவே கடந்த பிப்ரவரியில் செய்யாறு ஆலையை ரூ.958 கோடியில் விரிவுபடுத்த ராயல் என்பீல்டு திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது அதன் 2-வது பெரிய மெகா முதலீடு ஆந்திராவுக்குச் சென்றுள்ளது தமிழ்நாடு தொழில்துறைக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இதன் மூலம் மேலும் 15,000 நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை தமிழ்நாடு இழந்துள்ளது.
சுணக்கம்
புதிய தவெக அரசின் கொள்கைத் தெளிவின்மை, நிர்வாகத் தொடர்ச்சியற்ற தன்மை மற்றும் அனுமதி நடைமுறைகளில் நிலவும் சுணக்கம் காரணமாக, புதிய நிறுவ னங்கள் தமிழ்நாடு அரசுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தக் கூட தயங்குவதாகத் தொழில்துறை வட்டாரங்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். தி.மு.க. ஆட்சியில் கொரோனா காலத்திலும் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடுகள் நடத்தப்பட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்ட நிலையில், தற்போதைய தவெக அரசு திமுகவின் திட்டங்களை மட்டுமே காப்பி அடிப்பதாகவும், புதிய முதலீடுகளை ஈர்க்கத் தவறி விட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஒரே வாரத்தில் சுமார் 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங் களும், 25,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையிலும், தற்போதைய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாகக் கூறி எதிர்க்கட்சிகளும், இளைஞர்களும் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியைத் தக்கவைக்கவும், இளைஞர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும் தவெக அரசு உடனடியாகத் தெளிவான கொள்க திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
