பெரியார் உலக நன்கொடை

சுயமரியாதைச் சுடரொளி மேனாள் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் மானமிகு கோ.ரங்கசாமி நூற்றாண்டு பிறந்தநாள் நினைவாக,  பெரியார் உலகத்திற்கு ரூ.50000/- நன்கொடையினைத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் மருத்துவர் மீனாம்பாள் – பொறியாளர் சாமிநாதன் – தணிக்கையாளர் ராமச்சந்திரன் ஆகியோர் குடும்ப சார்பில் வழங்கினர், (இத்துடன் மொத்தம் ரூ.8,60,000 வழங்கப்பட்டுள்ளது)

ரங்கசாமி ராஜம் அறக்கட்டளைக்கு  (Endowment)
மேலும் ரூ.1,55,000 நன்கொடை

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), “ரங்கசாமி ராஜம் அறக்கட்டளை” (Rengaswamy Rajam Endowment) கடந்த 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. அதற்கு வழங்கப்பட்ட நன்கொடைகளின் வாயிலாக ரூ.21,60,000 திரண்டுள்ளது. அதன் வங்கி வைப்புத் தொகைக்கான வட்டியாக ரூ.3,85,000 இதுவரை கிடைத்துள்ளது.

இத் தொகையுடன், ரங்கசாமி – ராஜம் குடும்பத்தினர் சார்பில் மேலும், ரூ.1,55,000 நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த அறக்கட்டளையின் தொகை ரூ.27 லட்சமாக உயரும்.

இதன் மூலம் ஒவ்வொரு கல்வியாண்டும், பி.காம். பயிலும் நான்கு மாணவர்களுக்குக் கல்விக் கட்டணம் செலுத்தவும் இக் குடும்பத்தினர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *